விநோத ரஸ மஞ்சரி (2)

சீனி ஒரு சம்பவம் சொன்னார்.  அவர் அடிக்கடி மலேஷியா செல்பவர்.  பலமுறை மலேஷிய நண்பர்கள் அவரிடம் செல்லமாகக் குறைபட்டுக் கொண்டார்களாம்… ”என்னா தல எங்க ஊர்ப் பக்கம் வந்தா சொல்லக் கூட மாட்டேன்றிங்க… முன்னாடியே சொன்னீங்க வந்து பாத்து கவனிப்போம்ல.” சீனி இளைஞர்.  அதனால் இந்த விஷயத்தில் என் அளவுக்கு அனுபவம் இல்லை.  அதனால் அந்த நண்பர்களின் வார்த்தைகளை நிஜமென்று நம்பி அடுத்த முறை முன்கூட்டியே சொல்லி விட்டார்.  ஒருத்தரிடமிருந்தும் பதிலே இல்லை.  ஒருத்தர் என் பொண்டாட்டிக்குத் … Read more

விநோத ரச மஞ்சரி

சாரு ஆன்லைனுக்குக் கட்டணம் கட்டியும் படிக்கலாம்; கட்டாமலும் படிக்கலாம்.  பணம் என்பது எப்போதுமே என் சிந்தனையில் இருந்ததில்லை.  அன்றாட வாழ்வுக்குத் தேவைப்படும் ஒரு காகிதம் என்ற அளவில் மட்டுமே பணத்தை மதிக்கிறேன்.  அதே சமயம், இனிமேற்கொண்டு எதையுமே இலவசமாகச் செய்வதில்லை என்று தீர்மானமாக முடிவெடுத்து விட்டேன்.  விதிவிலக்குகள் எப்போதுமே உண்டு.  சமீபத்தில் ந. சிதம்பர சுப்ரமணியனின் புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றேன்.  இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பத்தாயிரம் ரூபாய் வாங்குகிறேன்.  ஆனால் நாகேஸ்வர ராவ் … Read more

பஜெநாத்தோ

மேலே உள்ள இணைப்பில் உள்ள பாடலைக் கேட்டு விட்டு இதைப் படித்தால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளலாம்.  பாடலைப் பாடியவர் கார்லோஸ் பீபெஸ் (Carlos Vives).  ஸ்பானிஷில் v-ஐ b-ஆகத்தான் உச்சரிப்பார்கள்.  இந்தியாவில் வங்க மொழியிலும் அப்படித்தான்.  நாம் வசந்தி வங்காளிகள் பசந்தி என்பார்கள்.  நமக்கு ரவீந்திரநாத்.  அவர்களுக்கு ரபீந்திரநாத்.  இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால், கொலம்பியாவின் மிகப் புகழ்பெற்ற இசை வடிவமான பஜெனாத்தோ பாணி பாடல் இது.  ரோமன் லிபியில் Vallenato.  இதன் உச்சரிப்புதான் பஜெநாத்தோ.  … Read more

ராஸ லீலா collectible

ராஸ லீலா collectibles (Collecto’s copy) பற்றி அதிகம் பேருக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். வாசகர் வட்டத்தின் உள்வட்டத்தினர் மட்டுமே பணம் அனுப்பி முன்பதிவு செய்திருக்கின்றனர். இந்த கலெக்டிபிளின் விலை ரூ.10,000/- இதன் மதிப்பு இப்போது தெரியாது. சுமார் ஐந்து ஆண்டுகள் ஆனாலே இந்தப் பிரதியின் மதிப்பு தெரிய வந்து விடும். நெப்போலியன் காலத்தில் தயாரிக்கப்பட்ட கோனியாக் இப்போதும் கிடைக்கிறது. விலை இரண்டரை லட்சம் ரூபாய். ’கலெக்டிபிள்’ என்றால் அதன் பின் அட்டையில் ராஸ லீலாவின் அந்தப் … Read more

மயானக் கொள்ளை (நாடகம்)

                                                                              அங்கம் : ஒன்று                                           காட்சி : ஒன்று மாலை ஐந்து மணி. கல்பனா, விஜி, ஒரு இளைஞன். சேரியில் இரண்டு பேர் மட்டுமே நடக்கக் கூடிய அளவுக்குக் குறுகலான ஒரு தெரு.  நாய்களின் குரைப்பு மற்றும் பூனைகளின் சப்தம்.    தெருவுக்கு நடுவே சாக்கடை.  ஒரு ஓரத்தில் தண்ணீர் ட்ரம்.  கூரையில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள்.  கொடியில் பெண்களின் உள்பாவாடை மற்றும் நைட்டிகள் காய்கின்றன.  சுடிதார் அணிந்த, 30 வயது மதிக்கத்தக்க கல்பனா ஒரு … Read more

2014-இல் எழுதிய ஒரு சிறிய குறிப்பு

ராஸ லீலா பிழைதிருத்தம் போய்க் கொண்டிருக்கிறது.  ஒரு இடத்தில் வகங்களும் என்று இருந்தது.  அதை வனங்களும் என்று மாற்றினேன்.  இருந்தாலும் ஒரு சம்சயம்.  நெட்டில் தேடலாம் என்று அந்தப் பத்தியின் ஆரம்பமான ஜோதியும் புவியும் எத்தனை விசாலமாயுள்ளனவோ என்று தட்டச்சு செய்தேன்.  பின்வரும் சிறிய குறிப்பு சாருஆன்லைனில் 2014-இல் எழுதியிருந்தது வந்தது.  கடவுளே, இனிமேலாவது என் எழுத்தைத் திரும்பவும் பிழைதிருத்தம் செய்யாமலிருக்க அருள் பாலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன்.  பின்வரும் குறிப்பு சாருஆன்லைனில் நவம்பர் 2, … Read more