பெட்டியோவும் சிவப்பு நிற இதயக் குறியும்…

பெட்டியோ நாவலின் விற்பனை தமிழ் இலக்கிய உலகில் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஆனால் நான் என்ன சாதனை செய்தாலும் அது இங்கே செய்தி இல்லை என்பதால் நானேதான் வழக்கம்போல் என் தளத்தில் அந்தச் செய்தியை வெளியிட வேண்டியிருக்கிறது. முதலில் கீழே உள்ள விவரங்களைப் பாருங்கள். இதுவரை பெட்டியோ நாவல் பதினோரு பிரதிகள் என்.எஃப்.டி.யில் விற்பனை ஆகியிருக்கின்றன. முதல் பிரதியாக இரண்டாம் எண்ணைக் கொண்ட பிரதி 1260 டாலர், அதாவது, ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்றது. வாங்கியவர் … Read more

உல்லாசம், உல்லாசம்…

நான்கு நாட்களுக்கு முன் அராத்து ஃபேஸ்புக் மூலமாக என்னிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.  நான் அப்போது பாதுக்கவிலும் பிறகு கொழும்பிலும் மிக முக்கியமான நேர்காணல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  என்னைப் பற்றி கே.கே. சமன் குமர எடுத்த ஆவணப்படமும் மும்முரமாகப் போய்க் கொண்டிருந்தது.   காலையில் பத்துக்கு ஆரம்பித்தால் இரவு ஒன்பது மணிக்குத்தான் படப்பிடிப்பு முடியும்.  அதற்கு மேல் நள்ளிரவு இரண்டு மணி வரை வைன்.  கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு எபிசோடுகளை எடுத்திருக்கிறார் சமன் குமர.     இப்போது அராத்துவின் பதிவும் … Read more

Conversations with Aurangzeb

Conversations with Aurangzeb நாவல் சென்னை, பெங்களூர், மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள பிரதான புத்தகக் கடைகளில் முன்னணி விற்பனையில் உள்ளதாகத் தகவல் கிடைத்தது. மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதுவரை வாங்காதவர்கள் க்ராஸ்வேர்ட் போன்ற கடைகளில் நாவலை வாங்கிக் கொள்ளலாம். சில புகைப்படங்கள் கீழே:

பெட்டியோ: முதல் மதிப்புரை

பெட்டியோ நாவலுக்கான முதல் மதிப்புரை அந்த நாவலை யாருக்கு நான் சமர்ப்பணம் செய்திருக்கிறேனோ அவரிடமிருந்தே வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சித்த மருத்துவரும் என் நண்பருமாகிய பாஸ்கரன் பெட்டியோவுக்கு ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறார். எந்நேரமும் தன்னை நாடி வரும் மனிதர்களுக்கு மருத்துவத் தொண்டு செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு இத்தனை பெரிய நாவலைப் படிக்க எங்கே நேரம் இருக்கும், ஒரு வருடத்தில் படியுங்கள் என்றே சொல்லியிருந்தேன். அவரோ ஓரிரு தினங்களிலேயே படித்து மதிப்புரையும் எழுதி விட்டார். அவந்திகா … Read more

பெட்டியோ நாவலை என்.எஃப்.டி.யில் எளிதாக வாங்குவது எப்படி? வாங்குவதால் ஏற்படக் கூடிய குடும்ப வன்முறையிலிருந்து தப்புவது எப்படி?

பெட்டியோ நாவலின் இரண்டாவது பிரதியை வாங்கிய அன்பர் தன் பெயரைக் குறிப்பிடாமல் ஏதோ எண்களையும் ஆங்கில எழுத்துக்களையும் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு முந்நூறு பக்க நூலை வாங்குவதால் ஏற்படக் கூடிய குடும்ப வன்முறையிலிருந்து தப்புவதற்கு இதை விட எளிதான வழி உண்டா என்ன? நீங்களும் இந்த வழிமுறையையே பின்பற்றலாம். பல வீடுகளில் ஐநூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கினாலே டிவோர்ஸ் வரை போகிறது என்று ஆண்களும் பெண்களும் புகார் சொல்கிறார்கள். குடிப்பதைக் கூட அனுமதிக்கிறாள், … Read more

பெட்டியோ இரண்டாவது பிரதி ஒரு லட்சத்துப் பத்தாயிரத்துக்கு விற்பனை!

தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு சாதனைதான். பெட்டியோ நாவலின் இரண்டாவது பிரதி ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. வாங்கியவர் பெயர் தரவில்லை. நியாயம்தான். குடும்பத்தில் குழப்பம் ஆகி விடக் கூடாது. மிக நிச்சயமாக அவர் வாங்கிய இந்தப் பிரதி இன்னும் மூன்று ஆண்டுகளில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகும். பத்தாயிரத்துக்கு வாங்கப்படும் பிரதிகள் இன்னும் ஒரு வருடத்திலேயே ஒரு லட்சம் ரூபாயை எட்டும். எனவே இப்போது நீங்கள் பெட்டியோவை வாங்குவதற்காக செலவிடும் … Read more