கண்ணுக்குப் புலனாகாத தடையும் ஓர் நற்செய்தியும்…

என் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன், என் மீது கண்ணுக்குப் புலனாகாத தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று.  சிலர் நான் ஏதோ இட்டுக் கட்டிச் சொல்கிறேன் என்று நினைப்பார்கள்.  பலமுறை இது பற்றி உதாரணங்களுடன் எழுதியிருக்கிறேன்.  இன்னும் சில உதாரணங்கள் தருகிறேன். ஆஃப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் உள்ள சர்வாதிகார  நாடுகளில் எழுத்தாளர்களை அரசாங்கமே நாடு கடத்தும்; இல்லாவிட்டால் கொன்று விடும்; அல்லது அவர்களாகவே தப்பித்து ஐரோப்பா சென்று விடுவார்கள். இடதுசாரி அரசாக இருந்தால் எழுத்தாளர்களை அரசாங்கமே ஐரோப்பிய நாடுகளுக்குத் தூதராக … Read more

தினமலரில் அடியேனின் கட்டுரை

இன்றைய 30 ஜூன் 2016 தேதியிட்ட தினமலரில் சிந்தனைக் களம் பகுதியில் என் கட்டுரை வெளிவந்துள்ளது.  மனோபாவம் மாற வேண்டும் என்பது தலைப்பு.  “தினமலர் பார்த்தேன். அதில் சிந்தனை களம் என்ற ஒரு பக்கமே இல்லியே” என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் வாசகிகளுக்கு ஒரு விளக்கம்.  சிந்தனைக் களம் பகுதி இன்றைய தினமலரின் 12-ஆம் பக்கத்தில் வந்துள்ளது.  என்னுடைய தீவிர வாசகர்கள் நாப்பத்திரெண்டு பேரும் இன்றிலிருந்து தினமும் தினமலர் வாங்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  காரணம், இனிமேல் … Read more

Raman Raghav 2.0

அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 படம் பற்றிய என் மதிப்புரையை ஏஷியாநெட்டில் நீங்கள் படிக்கலாம்.  இந்த மதிப்புரையில் குறிப்பிட்டுள்ள ஒரு விஷயம், இந்தப் படத்தின் லொகேஷன்.  இந்தப் படத்தை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் மிக முக்கியமான காரணி இதன் லொகேஷன்.  ஒரு படத்துக்கு லொகேஷனும் நடிகர்களுமே அதி அத்தியாவசியம் என்று அனுராக் சொல்லியிருப்பதாக பிரபு சொன்னார். நான் கோவா சிறையில் தருணைச் சந்திக்கப் போயிருந்த போது அங்கே எனக்குத் துணையாக இருந்தவர் டியா.  தருணின் … Read more

அழகின் பேருரு…

பஞ்சாபி மொழியிலும் குடி என்றால் போதை தான்.  ஆனால் மது போதை அல்ல.  குடி என்றால் பெண்.  பஞ்சாபியின் மிக அழகான வார்த்தைகளில் ஒன்று, குடி.  உட்தா பஞ்சாப் படத்தில் வரும் இக் குடி என்ற இந்தப் பாடலை இதோடு 500 தடவைகளுக்கு மேல் கேட்டிருப்பேன்.  இந்தப் பாடலை ஆலியா பட்டும் பாடியிருப்பது இப்போதுதான் தெரிந்தது.  இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் எப்படியோ அப்படித்தான் ஆலியா பட்.  பேரழகி என்ற வார்த்தையெல்லாம் அவரை அவமானப்படுத்துவது போல.  கடவுள்.  கடவுள்.  அழகின் … Read more