பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு. செல்லப்பா : பகுதி 2

பூனாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் விஷ்ணு கேஷவ் வாலிங்க்கர் என்ற ஒரு பிராமண பேராசிரியர் கிறித்தவராக மதமாற்றம் செய்யப்படுகிறார். அடுத்தக் காட்சியில் பேராசிரியர் வீட்டுக்கு தாமோதர் சாப்பேகர், பாலகிருஷ்ண சாப்பேகர் என்ற இரண்டு சகோதரர்கள் செல்கிறார்கள். அன்றைய நாள் 31 ஆகஸ்ட் 1896. பேராசிரியர் கிறிஸ்தவ மதத்தின் நன்மைகள் பற்றிச் சொல்லி அவர்கள் இருவரையும் ஆண்ட்ரூஸ் பாதிரியாரிடம் அழைத்துப் போவதாகக் கூறுகிறார். அப்போது வெளியே பெரிய பஜன் சத்தம் கேட்கிறது. ‘இந்து மதமே இப்படித்தான். கிருஷ்ணரின் ஜன்ம … Read more

புதிய அரங்கம்

புதிய அரங்கம் – சென்னையில் புத்தக வெளியீடு, திரையிடல் நிகழ்வுகள் நடத்த… நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் வடபழனி அலுவலகத்திற்கு ஏப்ரல் 14ஆம் தேதி குடிபெயரவிருக்கிறோம். வடபழனியில் மிக அருமையான சினிமாவிற்கான ஒரு ஒருங்குகூடலாகவே இந்த அலுவலகம் திகழும். அலுவலகம் என்பதை தாண்டியும், இன்னொரு முக்கியமான பொது பயன்பாட்டிற்கும் இந்த இடம் உதவப்போகிறது. அது பற்றி பின்னர் அறிவிக்கிறேன். ஆனால் இன்னொரு வகையிலும் நண்பர்கள் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகத்தில் நாற்பது பேர் … Read more

மனிதாபிமானிகளின் அக்குறும்பு…

அவந்திகாவிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு, நல்லவர்களை விட எனக்குத் திறமைசாலிகளே தேவையாக இருக்கிறார்கள் என்று.   நல்லவர்கள் என்னைப் போலவே பேக்குகளாக இருக்கிறார்கள். அதேபோல் இன்னொரு டார்ச்சர் பேர்வழிகள் மனிதாபிமானிகள்.  அடிக்கடி அவர்களை நான் நண்பர்களாக அடையும் பேறு பெறுகிறேன்.  அப்படிப்பட்ட மனிதாபிமானிகள் போனில் அழைத்தால் எடுக்காமல் போன் அழைப்பை வெட்டி விட்டு அவர்களே அழைப்பார்கள்.  காரணம், என்னுடைய செலவைக் கட்டுப்படுத்துகிறார்களாம்.  எப்போது பார்த்தாலும் நான் ஏழை, பணத்துக்கு சிரமப்படுகின்றவன் என்றேவா ஒருத்தரின் மனதில் என்னைப் பற்றிய … Read more

கல்கி நேர்காணல்

இந்த வார கல்கியில் என் நேர்காணல் வந்துள்ளது.  ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் பேட்டி மாதிரி இல்லாமல் ஒரு எழுத்தாளனின் பேட்டி போல் வந்துள்ளது.  அமிர்தம் சூர்யாவே காரணம்.   அவருக்கு என் நன்றி.

பிச்சைக்காரன் – விமர்சனம் (திருத்தப்பட்டது)

நண்பர் சசியின் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் படத்தைப் பார்த்த சூட்டோடு எழுதுகிறேன்.  படம் பிடிக்கவில்லை.  ஓ ஓ ஓ என்று படம் பூராவும் அம்மா பாச அசரீரி செவியைக் கிழிக்கிறது.  பின்னணி இசை கோரம்.  சகிக்கவில்லை.  இசை மிகப் பெரிய குறை.  சண்டைக் காட்சிகள் படு மோசம்.  படத்தில் எனக்குப் பிடித்த இடம், நாயகி டைட்டஸ், விஜய் ஆண்டனியின் கைகளில் முகம் புதைத்து அழும் காட்சி.  நானும் அழுது விட்டேன்.  இரண்டு … Read more

தேர்தல் களம் – அடியேனின் கருத்து

நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது ‘அதிருப்தி அலை’ இல்லை. ஜெயாவின் இந்த செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, திமுகவுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடத்தில் திமுக ஆடிய ஆட்டம், மக்களுக்கு மறக்கவில்லை. அதுதான். மட்டுமல்லாமல் திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட … Read more