விழா பதிவுகள் – 19
புத்தக வெளியீட்டு விழா நடந்த ராஜா அண்ணாமலை மன்றத்தின் கொள்ளளவு 800. அவ்வளவு பேரும் வந்து விடுவார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்த்தேன். அதில் எனக்கு சந்தேகமே எழவில்லை. சென்ற ஆண்டைப் போல் நோட்டீஸ் அடிக்கவில்லை; 70000 ரூ செலவு செய்து நகரம் பூராவும் விளம்பர போர்டுகள் வைக்கவில்லை (காசு இல்லை). தினசரிகளில் சென்ற ஆண்டைப் போல் விளம்பரம் கொடுக்கவில்லை. இந்துவிலும் தினமணியிலும் மட்டும் இன்றைய நிகழ்ச்சியில் வந்திருந்தது. ஆனாலும் 800 பேரை எதிர்பார்த்தேன். அதற்கு இரண்டே காரணங்கள்தான். … Read more