சாரு விவகாரமும் நம் அனைவரின் அமைதியும்! – ஆசைத்தம்பி

சாரு விவகாரமும் நம் அனைவரின் அமைதியும்! – ஆசைத்தம்பி சாரு பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழ்ச் சூழலில் நிலவும் அமைதியைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டாலும் தமிழ்நாட்டைப் பகைத்துக்கொண்டுவிடக் கூடாது. ஒருவர் இலக்கிய மடங்களோடு நெருக்கமாகவோ தொடர்பிலோ தூரத்து உறவாகவோ, குறைந்தபட்சம் பகைத்துக்கொள்ளாமலோ இருந்தாக வேண்டும். அப்படி இல்லையென்றால் எந்த ஆதரவும் ஒருவருக்குக் கிடைக்காது. மேலும் அந்த தனிநபர் கடைசி வரை போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். சாரு விஷயத்தில் மட்டும் அல்ல. நானும் கண்டுகொண்ட விஷயம் இது. இந்த … Read more

மத்திய சிறைச்சாலை (குறுங்கதை)

இரண்டு தினங்களுக்கு முன்பு மதியம் மூன்று மணி அளவில் வினித் ஃபோன் செய்தார்.  உங்கள் வீட்டின் கீழேதான் அராத்துவும் நானும் நிற்கிறோம், கீழே வருகிறீர்களா? உடனே கீழே கிளம்பினேன். எங்கே கிளம்புகிறாய் என்றாள் அவந்திகா.  ஏனென்றால், வேட்டி சட்டையோடு நான் வெளியே போனதில்லை.  ஏற்கனவே நான் திட்டமிட்டு வைத்து விட்டதால் எந்த சுணக்கமும் இல்லாமல் ”செல்வா வந்திருக்கிறார், பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டுக் கீழே இறங்கினேன். (சீனி என் வாழ்விலிருந்து தடை செய்யப்பட்டவர்.  வினித் … Read more

ஒன் மேன் ஆர்மி – 3

அதிச்சி பற்றி இன்னொரு தகவல் இப்போது வந்தது. அதிச்சியின் ஒரு நூல் உயிர்மையில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் நம் தமிழ் எழுத்தாளர்களின் ஒரு நூலாவது நைஜீரியாவில் கிடைக்கிறதா? அத்தனை தென்னமெரிக்க எழுத்தாளர்களையும் ஐரோப்பிய எழுத்தாளர்களையும் நாம் தமிழில் மொழிபெயர்த்துப் படிக்கிறோம். நம்முடைய ஒரு எழுத்தாளரை அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ படிக்கிறார்களா? அவர்களுக்குத் தெரிந்த “இந்திய” எழுத்தாளர்கள் சல்மான் ருஷ்டியும் அருந்ததி ராயும்தான். இருவருமே ஆங்கிலத்தில் எழுதும் சராசரி எழுத்தாளர்கள். நம்மை அமெரிக்கரும் ஐரோப்பியரும் எப்போது படிப்பார்கள் என்பதே விருது … Read more

ஒன் மேன் ஆர்மி – 2

ஒவ்வொரு விருதுக்குப் பின்னாலும் ஏகப்பட்ட ஊழல் கதைகள் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.  அது தெரிந்தும் ஏன் விருது பற்றி இத்தனை கவலைப்படுகிறீர்கள்? இது என்னிடம் பலரும் முன்வைக்கும் கேள்வி.  என்னுடைய எளிமையான பதில்:  நான் ஒரு சர்வதேச எழுத்தாளன்.  என் எழுத்து தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தானது அல்ல.  எல்லா எழுத்தாளர்களுமே சர்வதேச அளவில் வாசிக்கப்பட வேண்டியவர்கள்தான்.  மற்ற மொழி எழுத்தாளர்களுக்கெல்லாம் அது வாய்த்திருக்கிறது.  தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும் ஏன் அது நடப்பதில்லை? ஒரு ஹாருகி … Read more