நிலவு தேயாத தேசம் குறித்து…

வணக்கம் சாரு ஐயா, நிலவு தேயாத தேசம் வாசித்து முடித்து விட்டேன்.  இந்த நூலை வாசித்ததன் மூலம் எனக்கு ஏற்பட்ட புரிதல்களில் ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். நான் வாசித்த நூல்களிலே மதிப்புரை இல்லாத நூல் இதுவே. மதிப்புரைகள் வாசிப்பது எனக்குப் பிடிக்காது.  புத்தகத்தை வாசிக்கும் முன்னரே மதிப்புரையை வாசித்தால் அதை எழுதியவரின் பார்வை ஆழ்மனதில் பதிந்து விடும் என்று வாசிக்க மாட்டேன். இந்த நூலில் மதிப்புரை இல்லாதது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த … Read more

சில குறிப்புகள்

நான் சில காலமாக அமைதியாக இருப்பதன் காரணம், மிக முக்கியமான காரியம் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதுதான். இடையில் ஒருநாள் ராம்ஜி மற்றும் காயத்ரியுடன் நிர்வாணா என்ற உணவகத்துக்கு மதிய உணவுக்காகச் சென்றிருந்தேன். இருவரையும் சந்தித்து, இருவரோடும் உணவு உண்டு ஒரு ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். சவேரா ஓட்டலில் உள்ள மால்குடி உணவகம் செல்லலாம் என்ற முடிவில் இருந்தோம். அப்படியானால் இரண்டு கிளாஸ் வைன் அருந்தலாம் என்று நினைத்தேன். இரண்டு கிளாஸ் அருந்தினால் வீட்டில் தெரியாது. அதற்கு … Read more

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்

இந்தப் பரிசு விஷயத்தில் இரண்டு பேருமே கீழ்மையில் கிடந்து புரண்டிருக்கிறார்கள். ஒன்று, பரிசு கொடுக்கும் நிறுவனம். நடுவர்களின் தலைவர் நந்தினிக்கு எழுதிய கடிதத்தில் நாங்கள் அனைவரும் ஏகமனதாக உங்கள் மொழிபெயர்ப்பை (சாரு நிவேதிதாவின் நாவலை) முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று எழுதுகிறார். பிறகு நான்கு நாள்களில் “சட்டச் சிக்கல் வரும் என்று எங்கள் சட்டப் பிரிவு கருதுவதால் முதல் பரிசு உங்களுக்கு இல்லை” என்று கடிதம். என்ன சட்டச் சிக்கல் என்ற விவரம் இல்லை. ஒன்று, … Read more

இனவாதம்

*** என் நாவல் ஒன்று சமீபத்தில் ஒரு அமெரிக்கப் பதிப்பக நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்கள் வெளியிட்ட குறும்பட்டியலில் என் நாவலும் இருந்தது. விஷயம் வெளிவந்து பத்து நாள் இருக்கும். அதை நான் எந்த அளவுக்கு மதிக்கவில்லை என்றால், இங்கே என் தளத்தில் அந்தச் செய்தியையே நான் வெளியிடவில்லை. இதிலிருந்தே நான் அந்தச் செய்தியை மதிக்கவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஏன் மதிக்கவில்லை என்றால், இதேபோல் பல முறை என் நாவல்கள் குறும்பட்டியல்களில் இடம் பெற்று கடைசிப் … Read more