கடவுள் வந்திருக்கிறார்

என் நண்பரொருவரின் வாட்ஸப் dpயில் கடவுளின் நிழற்படம் மரபணுத் தொடர்ச்சியாய் வந்த கடவுள் கடவுள் என்றாலே மரபணுத் தொடர்ச்சிதானே மனிதர் யாவரும் தம்மை விடக் கடவுளை நேசிக்கும் காரணம் இதுதான் கடவுள் என் மரபணுத் தொடர்ச்சி என் ஸ்தூலத்தின் வாரிசு நண்பர் பலர் இடதுசாரிகள் கம்யூனிஸ்டுகள் அவரவர் கடவுளுக்கு அவரவர் வைத்த பெயர் கார்ல் மார்க்ஸ் லெனின் மா சே துங்   ஒருத்தர் எல்லாவற்றையும் தாண்டினார் புரட்சி நாயகன் சே குவேரா சே குவேரா போதாதா … Read more

the outsider – 26

செப்டம்பர் 15, திங்கள் கிழமை.  சாந்த்தியாகோவின் வீட்டுக்கு வந்த ரமோன் கட்டிடத் தொழிலாளிக்கான உடுப்பை அணிந்து கொண்டான்.  இருவரும் சேர்ந்து ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் எடுத்து ட்ரக்கில் போட்டார்கள்.  வழக்கம் போலவே ட்ரக் கிளம்பும்போது பிரச்சினை கொடுத்தது.  ஆனால் நான்காவது, ஐந்தாவது முயற்சியில் கிளம்பியது.  ஆஸ்வால்தோ தன் வாக்கி டாக்கியை எடுத்து சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு பெட்டிக் கடைக்குக் கிளம்பினான்.  ஆர்மாந்தோ வரும் வழியிலேயே ஒரு இடத்தில் காரை நிறுத்தி சாந்த்தியாகோ, ரமோன் மாதிரியே தானும் கட்டிடத் … Read more

கோவில்பட்டிக்கு வரச் சொல்லுங்கள்! (தகவல் தொடர்பு கட்டுரையின் தொடர்ச்சி)

அன்புள்ள நண்பருக்கு, உங்கள் வாட்ஸப் மெஸேஜ் கிடைக்கப் பெற்றேன்.  மன்னித்து விடும்படி எழுதியிருந்தீர்கள்.  மன்னிக்கும் அளவு பெரிய தவறு அல்ல உங்களுடையது.  நான் ஃபோன் செய்தேன்.  உங்களால் எடுக்க முடியாத நிலை.  பிறகு பதிலுக்கு ஃபோன் செய்ய மறந்து போனீர்கள்.  இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது?  உண்மையில் மன்னிப்பு என்பதன் அர்த்தம் “இனிமேல் இப்படி நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வேன்” என்பதுதானே?  ஆனால் அதற்கான தேவையே இனிமேல் எழாதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்.  நான் உங்களுக்கு ஃபோன் … Read more

the outsider (25)

பலவிதமாக ஆலோசித்தார்கள் கமாண்டோக்கள்.  அதில் ஒரு யோசனை: ஒரு ட்ரக்கை வாங்கி, அதில் ஆயுதங்களை வைத்து மேலே காய்கறிகளால் மூடி விடுவது.  ஒவ்வொரு வீடாகப் போய் காய் வேண்டுமா என்று கேட்பது.  இலக்கு வெளியே வரும்போது ட்ரக்கில் இருந்தபடியே தாக்குவது.  உடனே ஒரு சந்தேகம் வந்தது, சொமோஸாவின் பென்ஸ் குண்டு துளைக்காத காராக இருந்தால்? மேலும், ட்ரக் என்றால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்.  எனவே ட்ரக் யோசனை உடனடியாகக் கைவிடப்பட்ட்து.  என்ன செய்ய வேண்டும் என்றால், யாருடைய … Read more

தகவல் தொடர்பு

முந்தாநாள் சீனி ஒரு கதை அனுப்பியிருந்தார்.  ஐந்தே நிமிடத்தில் படித்து விட்டு சூப்பர்ப் என்று வாட்ஸப் செய்திருந்தேன்.  இன்று சீனி ஃபோன் பண்ணி, கதை படிக்க நேரம் இருந்ததா என்று கேட்டார்.  அப்போதே பதில் அனுப்பி விட்டேனே என்றேன்.  என் பதில் அவருக்குப் போய்ச் சேரவில்லை போல.  இது போன்ற சிறிய விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும் நம் வாசகர் வட்ட நண்பர்களுடன் தகவல் தொடர்பில் பிரச்சினையே வந்ததில்லை.  இதற்கு வெளியே தகவல் தொடர்பில் எனக்கு மன உளைச்சல் … Read more

ஈகோ

பொதுவாக மனிதர்களோடு சேர முடியவில்லை.  சேர்ந்து கூட்டாக வெளியூர் செல்ல முடியவில்லை.  அடுத்த மனிதனே பெரும் துன்பமாக இருக்கிறான்.  ஏன் இப்படி என்று பதினைந்து ஆண்டுகளாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  பதினைந்து ஆண்டுகள் என்பதற்கு ஒரு கணக்கு உள்ளது.  பதினைந்து ஆண்டுகளாகத்தான் சீனியை எனக்குத் தெரியும்.  சீனி என் வாழ்வில் நுழைந்த பிறகுதான் இந்தப் பிரச்சினை ஸ்தூலமாகத் தெரிய ஆரம்பித்தது.  அதாவது, பிரச்சினை சீனியின் மூலமாக அல்ல. சீனியும் நானும் அடுத்த மனிதரை எங்களோடு சேர்த்துக் கொள்ளும்போது பிரச்சினை … Read more