எழுத்தாளன் என்றால் எடுபிடியா?

எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதில்லை என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்.  அது என் நண்பகள் பலருக்கும் புரிவதில்லை.  ”உங்கள் நாவலை ஒரு லட்சம் கொடுத்து வாங்குகிறார்கள், பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள்.  அப்படியும் நீங்கள் இப்படிச் சொல்லலாமா?” என்பது அவர்கள் கேள்வி. அப்படி வாங்குபவர்கள் என் வாசகர்கள்.  தமிழ்ச் சமூகம் அல்ல.  தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களைத் தங்கள் எடுபிடிகளாக நினைக்கிறது.  பிரபு தேவா என்ற சினிமாக்காரருக்காக ஐயாயிரம் குழந்தைகளை இந்தக் கொடூரமான வெய்யிலில் நிறுத்தி வதைத்திருக்கிறார்கள்.  … Read more

அராத்து, ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்

சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடிக்குப் பிறகு வந்த காமெடியில் வடிவேலு மட்டும்தான் என் மனதில் நிற்கிறார். பிறகு அவர் வில்லனாக மாறின பிறகு அவரும் மனதிலிருந்து நீங்கி விட்டார்.  ஆக, வாழ்க்கையில் காமெடிக்குப் பஞ்சமான நிலைமைதான்.  வாசகர் வட்டத்திலும் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்கள் யாரும் இல்லை.  சீனி ஒரு புத்திசாலி.  புத்திசாலிகளுக்குக் காமெடி வராது.  ஜக்கியும் புத்திசாலி.  அவருக்கும் காமெடி வராது.  இப்படிப்பட்ட காமெடி வறட்சி மிகுந்த பாலைவனத்தில் ஒரு சோலையாக விளங்குபவர் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்.  எனக்கு … Read more

சென்னை வாழ்க்கை

இந்தியாவிலேயே சென்னைதான் மனிதர்கள் வாழவே முடியாத நகரமாக மாறியிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா என்று தெரியாது. நான் முப்பத்தைந்து ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன். முப்பத்தைந்து ஆண்டுகளாக இப்படித்தான் கதை. நான் எழுதப் போவது சென்னைவாசிகளுக்கும் சென்னைக்குக் குடியேறிய எழுத்தாள சிகாமணிகளுக்கும் பிடிக்காது. ஏனென்றால், அப்படி வந்த எழுத்தாளர்கள் ஏதோ சென்னையை ஒரு சொர்க்கலோகம் மாதிரி எழுதித் தள்ளுகிறார்கள். மைலாப்பூரில் ஒரு பிராமணர் (ஐயர்) முடிதிருத்தும் கடை வைத்திருக்கிறார். கர்னாடக இசை ஒலிக்கும். முகப்பில் மஹா பெரியவரின் பெரிய படம். … Read more

La ultima niebla

மேற்கண்ட ஸ்பானிஷ் தலைப்பின் நேரடி அர்த்தம் The Ultimate Fog. சீலே தேசத்தைச் சேர்ந்த Maria Luisa Bombal 1934இல் எழுதி வெளிவந்த இந்தக் கதையை சில ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் சற்று விரிவாக்கி The House of Mist என்ற தலைப்பில் வெளியிட்டார் போம்பல். விரிவாக்கிய பதிப்பை நான் படிக்கவில்லை. முப்பது பக்கங்களே கொண்ட இந்தக் கதையைப் போல் ஒரு கதையை நான் படித்ததில்லை. தமிழில் சி.சு. செல்லப்பா எழுதிய ஜீவனாம்சம் கதையை மட்டுமே லா … Read more

மைலாப்பூரில் கூழ் கிடைக்குமா?

ஃபேஸ்புக்கில் சீனி ஒரு மதிய வேளையில் கூழ் குடித்தது பற்றி எழுதியிருந்தார். என்ன ஆச்சரியம், நான் ஒரு நான்கு தினங்களாக கூழ் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். நான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் இருபது வயது வரை கோதுமை, கேழ்வரகு பற்றி எதுவுமே தெரியாது. பார்த்தது கூட இல்லை. கம்பு பற்றி கேள்வியே பட்டதில்லை. இருபது வயதுக்கு மேல்தான் காட்பாடி பக்கம் வந்த போது அங்கே கேழ்வரகு கூழ் குடிக்க நேர்ந்தது. அதற்குப் பிறகு நான் கூழுக்கு அடிமையாகி … Read more