கோழிக்கோடு இலக்கிய விழா – அமர்வு ஒன்று

கோழிக்கோடு இலக்கிய விழாவில் Translating India: A South Indian Context என்ற தலைப்பில் சாரு, ஜெயமோகன், தேவிகா மற்றும் Vasudhendra ஆகியோர் பங்கேற்ற கலந்துரையாடலின் இணைப்பு கீழே:

பிரம்மயுகம்: அராத்து

பிரம்மயுகம் படத்திற்கு அராத்துவின் விமர்சனம் கீழே: சாரு எதோ ஜாலி மூடில் இருந்திருப்பார் போல. லேசான நக்கலுடன் எழுதி முடித்து விட்டார். இந்தப் படத்தையெல்லாம் செருப்பால் அடிக்க வேண்டும். ஒரு கஞ்சா குடிக்கிக்கு , கஞ்சா இல்யூஷனில் என்ன தோன்றியதோ, அதை கஞ்சா குடித்துக்கொண்டே எடுத்து வைத்து நம்மை துவைத்து எடுக்கிறார்கள். படத்தில் ஒரு மண்ணும் இல்லை , ஒரு மயிரும் இல்லை. சாரு ஒரு படத்தை மலக்கிடங்கு என எழுதியிருப்பார். இந்தப்படம் ..நம்மை உட்கார வைத்து … Read more

இனிமேல் மம்முட்டி படங்களுக்கு மட்டும் வசனம் எழுத முடிவெடுத்திருக்கிறேன்…

ஊரே கொண்டாடுகிறதே என்று பிரம்மயுகம் படத்துக்குப் போனேன். ஏற்கனவே இப்படி ஊரே கொண்டாடுகிறதே என்று மம்முட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தைப் பார்த்து பதினைந்து நிமிடத்திலேயே நிறுத்தி விட்டேன். அப்படி ஒரு துர்சம்பவம் நடந்தும் பிரம்மயுகத்துக்குப் போனது என்னுடைய முட்டாள்தனம்தான். அப்படியும் சொல்ல முடியாது. என் நெருங்கிய நண்பர் ட்டி.டி. ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருப்பதால் அது எப்படி இருக்கிறது என்று பார்ப்பதும் என் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம் மட்டும் நிறைவேறி விட்டது. அடுத்து … Read more

My Life, My Text (Episode 01)

ஆங்கிலத்தில் நான் எழுதிய முதல் எழுத்து. இது கட்டுரை அல்ல. கதையும் அல்ல. சுயசரிதை. என் எழுத்தைத் தமிழில் பல காலமாகப் படித்து வந்திருக்கும் நண்பர்கள் இந்த முதல் அத்தியாயத்தைப் படித்ததும் என்னிடம் ஒரே விதமான கருத்தைக் கூறினார்கள். என் எழுத்தை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும்போது அது என்னதான் அட்டகாசமான மொழிபெயர்ப்பாக இருந்தாலும் அதில் நான் கம்மியாகவே தெரிகிறேனாம். ”சாருவின் அட்டகாசம், சாருவின் துள்ளல், சாருவின் கொண்டாட்டம், குசும்பு, நையாண்டி, எள்ளல் எல்லாமே அதில் காணாமல் போய் … Read more

கவிஞர் ஆசையின் உலக சாதனைக்கு வாழ்த்துக்கள்

கவிஞர் ஆசை கடந்த 105 மணி நேரத்தில் 174 கவிதைகளை எழுதி முடித்திருக்கிறார். சில கவிதைகளைப் படித்தேன். பரவசத்தின் உச்சம். களிவெறியின் உச்சம். பித்தநிலையின் உச்சம். அவர் திரும்பவும் லௌகீக உலகுக்கு வந்து விட பிரார்த்திக்கிறேன். இன்னொரு விஷயமும் உண்டு. இதையே வேறு ஏதாவது ஒரு மொழியில் யாராவது ஒரு கவிஞன் செய்திருந்தால் அது உலக அளவில் செய்தியாகி இருக்கும். தமிழர்கள் ஒரு ஃபிலிஸ்டைன் சமூகமாக வாழ்கிறார்கள். இங்குள்ள இளவட்டமோ நரகலை வண்டுகள் உருட்டிச் செல்லும் அல்லவா, … Read more