நம்பிக்கை
நம்மால் செய்யக்கூடியதெல்லாம் நம்பிக்கை கொள்வது மட்டுமே நாம் நேசிப்பவர்கள் நம்மையும் நேசிக்க முடியும் என்றும் நாம் யாருடன் நேரம் செலவிட விரும்புகிறோமோ அவர்கள் நம்முடன் நேரம் செலவிட முடியும் என்றும்… Salena Godden
நம்மால் செய்யக்கூடியதெல்லாம் நம்பிக்கை கொள்வது மட்டுமே நாம் நேசிப்பவர்கள் நம்மையும் நேசிக்க முடியும் என்றும் நாம் யாருடன் நேரம் செலவிட விரும்புகிறோமோ அவர்கள் நம்முடன் நேரம் செலவிட முடியும் என்றும்… Salena Godden
மரப்பாச்சி பொம்மைக்குசீலை கட்டிதலை வாரிசடை பின்னிபால் அன்னம் ஊட்டிய சிறுமியிடம்ஒருத்தி சொன்னாள்:”ஏய் மூடத்திஅது வெறும் மரக்கட்டைஅதற்கு உயிரில்லை.”அன்றிலிருந்துமனநலம் குன்றினாள் சிறுமி ஒருவன் தன்னைஞானியென சொல்லி வந்தான்ஒருத்தி அவனிடம்“அனுபவத்தில் சொல்கிறேன்நீ ஞானியல்லபைத்தியம்” என்றாள்அன்றிலிருந்துபைத்தியமானான் ஞானி
கடல் பற்றியெரிகிறதுஎதிரே நான்—மௌனம் தளும்புகிறது.
1 மைனாவின் பாடல் கேட்பதைசெவிகள் நிறுத்தி விட்டனதேன்சிட்டின் இசையும் தொலைந்து போயிற்றுஇரவுநட்சத்திரங்களின் ஒளியை மறைக்கிறதுநிலவு ஒரு மங்கிய கண்ணாடிசொற்கள் என்னை விட்டு ஓடி விட்டனவாசிப்பு கானல் நீர்சலன சித்திரங்கள் அர்த்தமற்ற நிழல்கள்சிநேகத்துடன் பழகி வந்தவிருட்சங்களும் கைவிட்டனநாய் பூனை என் குரல் மறந்தனநித்திரை தூரத்து நினைவுஊணும் சுவை குன்றியதுகனவுகளால் வேட்டையாடப்பட்டுகவிதையில் தஞ்சமடைகிறேன் 2 மனிதர் யாவரும் ஒருவரையொருவர்காயப்படுத்திக் கொள்கிறார்கள்ஆனாலும்ஒருவர் மீதொருவர்அன்பு செலுத்துவதாகவே நம்புகிறார்கள்அன்பின் மொழியை மட்டுமேகவிதையாக்குவதாகநான் நம்புவதைப் போல
பெட்டியோ நாவலில் வரும் நாயகி நயநதினி ஒருமுறை Samuel Barber Adaggio for Strings பாடலை இரவு முழுவதும் கேட்டு இறுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவாள். மோகமுள்ளில் யமுனா ஒரு ஹிந்துஸ்தானி இசை கேட்டு செத்து விடலாம் போலிருக்கிறது பாபு என்று சொல்வாள். பரவசத்தின் உச்சத்தில் அப்படித் தோன்றும். PD1 90187 bex dc paidsocial dv video youtube nomatterwhat edge ind en 16×9 15 சில தினங்களுக்கு முன் ஸ்ரீ மேரி ஹம் … Read more
1 கஞ்சா மயக்கத்தில்சிறுதுளி சர்க்கரையும்கோஹிநூர் வைரமாய்த் தெரியும்அப்படித்தான் நீபேனைப் பெருமாளாக்கிஎன் கையில் திணிக்கிறாய். மறுக்கிறேன்கவிதை எழுதச் சொன்னது நீங்கள்இப்போது வார்த்தைகள் கவிதையாகிஎன் விரல்களை மீறி வழிகின்றனநிறுத்தும் வழி தெரியவில்லைஒவ்வொரு எழுத்தும் நீங்களேஎழுதி ஈரம் காய்வதற்குள் உங்கள்பார்வைக்கு வருகிறதுஎந்த அவசரமுமில்லைவாய்த்த நேரத்தில் வாசிக்கலாம்ப்ளூ டிக் ஒரு சிறு மகிழ்ச்சி அது என்னதிடீரென்று நீங்கள்? பாராட்டு தேவையில்லைசன்மானம் கேட்கவில்லைவாசித்த விவரமறிந்தால்ஒரு மெல்லிய மகிழ்ச்சிஅதற்கும் தாளிடுபவர்களைவேறெப்படி அழைப்பது? 2 நீயில்லாமல்என் கவிதையில்லைநீ அதை வாசிக்கையில்-அது ஒரு நதியின் நிழலாய்என் கரையையும்உன் மௌனத்தையும்இணைக்கிறது