இசையெனும் உன்மத்தம்

பெட்டியோ நாவலில் வரும் நாயகி நயநதினி ஒருமுறை Samuel Barber Adaggio for Strings பாடலை இரவு முழுவதும் கேட்டு இறுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவாள். மோகமுள்ளில் யமுனா ஒரு ஹிந்துஸ்தானி இசை கேட்டு செத்து விடலாம் போலிருக்கிறது பாபு என்று சொல்வாள். பரவசத்தின் உச்சத்தில் அப்படித் தோன்றும்.
PD1 90187 bex dc paidsocial dv video youtube nomatterwhat edge ind en 16×9 15

சில தினங்களுக்கு முன் ஸ்ரீ மேரி ஹம் ஜோலியா(ங்) என்ற பாடலின் லிங்கை அனுப்பியிருந்தாள். அப்படி ஒரு பாடலை சமீப காலத்தில் நான் கேட்டதில்லை. பாகிஸ்தானில் நடக்கும் கோக் ஸ்டுடியோ இசை நிகழ்வின் எட்டாவது சீஸன். இதே நிகழ்ச்சி இந்தியாவிலும் நடத்தப்படுகிறது. பாகிஸ்தான் நிகழ்ச்சியின் நிழலைக்கூட தொட முடியவில்லை. படு கேவலமாக இருக்கிறது இங்கே நடக்கும் கோக் ஸ்டுடியோ நிகழ்ச்சி. என்ன காரணம் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை.

மேரி ஹம் ஜோலியா(ங்) பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்ற கணக்கே இல்லை. இந்தப் பாடலின் பெண் குரல் ஃபிஸ்ஸா ஜவேத். இவர் குரலின் கீச்சுத்தன்மையும் நாட்டுப்புறப் பாடகர்களின் விசேஷமும் சேர்ந்து இந்தக் குரலுக்கு நம்மை அடிமைகொள்ளச் செய்கிறது.

ஃபிஸ்ஸா ஜவேத்

Coke Studio Season 8| Ve Baneya| Fizza Javed & Mulazim Hussain

அதே எட்டாவது சீஸனில் இடம் பெறும் ஹீனா கி குஷ்பூ என்று இன்னொரு பாடலும் எண்ணற்ற தடவைகள் கேட்க வைப்பது.

Coke Studio Season 8| Ve Baneya| Fizza Javed & Mulazim Hussain

இதற்கிடையில் கோக் ஸ்டுடியோவின் பதினைந்தாவது சீஸனை எதேச்சையாகப் பார்த்தேன். முழுக்க முழுக்க பஞ்சாபிப் பாடல்கள். இசைக்கு ஏற்ற மொழி அரபி, ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ். அதேபோல் பஞ்சாபி. காரணம், பஞ்சாபி மொழியில் மூக்கால் பேசும் தன்மையும் கலந்திருப்பதால் அந்த இனிமை கிடைக்கிறது.

கோக் ஸ்டுடியோ பதினைந்தாம் சீஸனின் பஞ்சாபிப் பாடல்களில் ஒன்றை இங்கே தருகிறேன். பாகிஸ்தானில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் தலித் பெண் பாடகிகள் சேர்ந்து பாடியது.

Aayi Aayi | Coke Studio Pakistan | Season 15 | Noman Ali Rajper x Babar Mangi x Marvi Saiban