குவாட்டர் ஓல்ட் மாங்க் (சிறுகதை)

பொதுவாக பெருமாளுக்கு வருடம் தேதியெல்லாம் ஞாபகம் இருக்காது. அதற்கு மாறாக இப்போது அவன் விவரிக்கப் போகும் சம்பவங்கள் எப்போது நடந்தன என்று நன்றாக ஞாபகம் இருந்தன. எல்லாம் நடந்து முப்பத்தைந்து ஆண்டுகள் இருக்கும்.  பெருமாளின் நண்பன் பெயர் குமார்.  உண்மைப் பெயர் அல்ல. கற்பனைப் பெயர்.  உண்மைப் பெயரைச் சொல்லத்தான் விருப்பம்.  ஆனால் அப்படிச் சொன்னால் அப்போது எனக்கு பெருமாள் என்றால் யார் என்றே தெரியாது என்று அவனுடைய ப்ளாகிலோ ஃபேஸ்புக்கிலோ பச்சைப் பொய் புளுகுவான் நண்பன்.  … Read more

பெட்டியோ என்.எஃப்.டி.யில்

என்.எஃப்.டி.யில் பெட்டியோ நூறு பிரதிகள்தான் விற்பனைக்கு இருக்கும். இருபத்தைந்தாவது பிரதி ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. சில நண்பர்கள் பத்தாயிரம் ரூபாய் விலையுள்ள பிரதிகளைக் கேட்டிருக்கிறார்கள். பதினெட்டாம் இலக்கம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. அதேபோல் 22 மற்றும் 70ஆம் இலக்கம் உள்ள பிரதிகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. மற்ற இலக்கங்கள் வேண்டுவோர் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

பெட்டியோ: இருபத்தைந்தாவது பிரதி

பெட்டியோ நாவலின் இருபத்தைந்தாவது பிரதியை ஒரு நண்பர் முன்பதிவு செய்திருந்தார். அதனால் நூறாவது பிரதி (ஐந்து லட்சம் ரூபாய்), இரண்டாவது பிரதி (ஒரு லட்சம் ரூபாய்) ஆகியவற்றுக்குப் பிறகு இருபத்தைந்தாவது பிரதியை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். சில நண்பர்கள் பத்தாயிரம் ரூபாய் விலையுள்ள பிரதிகளை விற்பனைக்குக் கொண்டு வாருங்கள் என்று கேட்டார்கள். அது இப்போதைக்கு இயலாது. காரணம், இரண்டாவது பிரதி விற்றால்தான் பத்தாயிரம் ரூபாய்க்கான பிரதியைக் கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், இரண்டாவது பிரதியை விற்பனையிலிருந்து தூக்க … Read more

சொல் கடிகை – இரண்டாம் பாகம் – 1.குயவீதி

சொந்த ஊர் பற்றியோ, சொந்த மொழி பற்றியோ, குடும்பம் பற்றியோ, இளமை மற்றும் கடந்த காலம் பற்றியோ எனக்கு எந்தவித நாஸ்டால்ஜிக் உணர்வும் கிடையாது.  நான் வளர்ந்த நாகூர் கொசத்தெருவைப் பார்க்கும்போது மட்டும் ஒரு ஆச்சரிய உணர்வு உண்டாகும்.  (இந்தக் குப்பைக் காட்டிலிருந்தா வந்தோம்?)  தில்லி மீது ஒரு ஏக்கம் உண்டு.  ஆனால் 1980களின் தில்லி இப்போது இல்லை.  கடந்த நானூறு ஐநூறு ஆண்டுகளாக ஒரே மாதிரி இருந்த தில்லியை மெட்ரோ என்ற ரயில் பாதை மெட்ரோபாலிடன் … Read more

பெட்டியோ – இரண்டாவது பிரதி

பெட்டியோ இரண்டாவது பிரதி விற்பனைக்கு வந்துள்ளது. விலை என்.எஃப்.டி.யில் தற்போதைய விலை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய். இது பற்றி என்.எஃப்.டி.யில் கருத்து சொல்லியிருக்கும் கண்ணாயிரங்கள் என்னுடைய பேராசை பற்றி எழுதியிருக்கிறார்கள். நாற்பது ஆண்டுகளாக ஓசியில் எழுதிக் கொண்டிருந்தவன் நான். பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து சீலே போய் வந்து நாலு கட்டுரை எழுதினேன். தி இந்துவில். ஒரு கட்டுரைக்கு ஆயிரம் ரூபாய் என்று நாலாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இது ஓசி என்றுதானே கணக்கு? அதை … Read more