பெட்டியோ – இரண்டாவது பிரதி

பெட்டியோ இரண்டாவது பிரதி விற்பனைக்கு வந்துள்ளது. விலை என்.எஃப்.டி.யில் தற்போதைய விலை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய். இது பற்றி என்.எஃப்.டி.யில் கருத்து சொல்லியிருக்கும் கண்ணாயிரங்கள் என்னுடைய பேராசை பற்றி எழுதியிருக்கிறார்கள். நாற்பது ஆண்டுகளாக ஓசியில் எழுதிக் கொண்டிருந்தவன் நான். பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து சீலே போய் வந்து நாலு கட்டுரை எழுதினேன். தி இந்துவில். ஒரு கட்டுரைக்கு ஆயிரம் ரூபாய் என்று நாலாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இது ஓசி என்றுதானே கணக்கு? அதை விடுங்கள். என் உயிரைத் தத்தம் செய்து ஒரு நாவல் எழுதுவேன். ஐநூறு பிரதி போகும். எனக்கு ராயல்டியாக ஐயாயிரம் ரூபாய் வரும். இதன் பெயர் என்ன? இப்படியே நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து விட்டதால் இப்போது என் எழுத்துக்கு விலை வைத்திருக்கிறேன். இது விலை அல்ல. நன்கொடை. அவ்வளவுதான். முடிந்தவர்கள் வாங்குங்கள். முடியாதவர்கள் பத்தாயிரம் ரூபாய் பிரதி வரும்போது வாங்கலாம். அதுவும் முடியாதவர்கள் என்னுடைய மற்ற 99 நூல்களை ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் இருநூறு ரூபாய் முந்நூறு ரூபாய் கொடுத்து வாங்கிப் படியுங்கள். எனக்கு எழுதிக் கேட்டால் இலவசமாக பிடிஎஃப் அனுப்புகிறேன்.

https://opensea.io/assets/ethereum/0x10de9040a2337a8982f01006493cb26aff4abd9b/1

மேற்கண்ட லிங்க் மூலம் சென்று வாங்கும் முறை தெரியாவிட்டால் வினித்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

வினித் தொலைபேசி எண்: 84384 81241

என் தொடர்பு முகவரி: charu.nivedita.india@gmail.com