புத்தகத் திருவிழா

வணக்கம் சாருஜப்பான் கட்டுரை வாசித்தேன். குருவி போல பறந்து கொண்டே இருக்கிறீர்கள். பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்.நேற்று தருமபுரி புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.ஏதோ கைவிடப்பட்ட பேய் பங்களா போல் இருந்தது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கூட்டமே இல்லை. பதிப்பாளர்களிடம் பேசியபோது அவர்களும் விற்பனை மிகவும் குறைவாக இருப்பதாகவே சொன்னார்கள். மாலை 5 மணியளவில் ஒன்றிரண்டு பேர் தெரிந்தனர். பக்கத்தில் வெறிச்சோடியிருந்த அரங்கில் தனியாக ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். ஈரோடு,சேலம் புத்தகத் திருவிழாக்களை விட கூட்டம் … Read more

ஒரு தகவல் பிழை

பால் ஷ்ரேடர் ரேஜிங் புல், லாஸ்ட் டெம்டேஷன், டாக்ஸி டிரைவர் ஆகிய படங்களின் இயக்குனர் அல்ல. திரைக்கதை மட்டுமே எழுதியிருக்கிறார். கட்டுரை வெளிவந்த உடனேயே இதைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிய அப்துல், சக்திவேல் (சென்னை) ஆகிய நண்பர்களுக்கு என் நன்றி.

ஜப்பான் : கனவும் மாயமும் – 1

In fact, the whole of Japan is a pure invention.  There is no such country, there are no such people.  ஆஸ்கார் ஒயில்ட் 1889இல் எழுதினார்.  ஆனால் அதற்கு அடுத்த வாக்கியத்திலேயே ஜப்பானியர்கள் ஒன்றும் அதிசய மனிதர்கள் அல்ல என்றும் சொல்கிறார்.  ஆனால் நான் அவருடைய முதல் வாக்கியத்தைத்தான் எடுத்துக் கொள்வேன்.  ஆம், ஜப்பானும் ஜப்பானியரும் மேற்கத்தியருக்கு நம்பவே முடியாத ஒரு அதிசயமாகத்தான் இருந்தார்கள், இருந்து வருகிறார்கள்.  உலகில் யார் … Read more

பெட்டியோ… : நேசமித்திரன்

பெட்டியோ… நாவலை நேசமித்திரனுக்கும் அனுப்பியிருந்தேன். ஒரே நாளில் படித்து விட்டார். நாவலின் வடிவத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைச் சொன்னார். அதே மாற்றத்தை பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அராத்துவும் சொல்லியிருந்ததால் இப்போது அந்த மாற்றத்தைச் செய்து முடித்து விட்டேன். இப்போதைய வடிவத்தில் நாவல் இன்னும் காத்திரமானதொரு பின்நவீனத்துவப் பிரதியாக மிளிரும். பாவம் ஸ்ரீராம்தான், இதோடு நாவலை ஐந்தாறு முறை படித்து விட்டார். ஒவ்வொரு மாற்றம் செய்யும் போதும் இதுவே கடைசி என்று தோன்றும். இந்த நாவலைப் போல் வேறு … Read more

சொர்க்கம் என்றால் என்ன?

சொர்க்கம் என்றால் என்ன?  இனிமை என்றால் என்ன?  மகிழ்ச்சி என்றால் என்ன? உன்னதம் என்றால் என்ன?  அற்புதம் என்றால் என்ன?  அதிசயம் என்றால் என்ன?    இன்று என் சிநேகிதியுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது நான் எப்போதுமே சொல்லும் வசனத்தை ஒரு தொள்ளாயிரமாவது தடவையாகச் சொன்னேன்.  இந்த உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான்தான்.  என்னை விட மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் துறவிகள், ஞானிகள், ரிஷிகள்.  நான் பேசுவது இப்படி ஒரு அமைப்பில் வாழ்ந்து கொண்டு … Read more

பெட்டியோ பற்றி அராத்து

சாருவின் பெட்டியோ நாவலை படித்து முடித்தேன். பெரும்பாலானவர்கள் சாரு சர்ச்சைக்குரிய எழுத்தாளர் என்று திருவாய் மலருவார்கள். கடைசியில் பார்த்தால் அதில் ஒரு சர்ச்சையும் இருக்காது. இந்த நாவலில் நான்கைந்து வெடி குNடுகள் இருக்கின்றன. இலக்கிய உலகமே கலவர பூமியாக மாறக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. எத்தனை தலைகள் விர்ச்சுவலாக உருளப்போகின்றனவோ? NFT என்பதால் இதெல்லாம் நடக்காமல் போகக்கூட சாத்தியம் உள்ளது. 100 பிரதிகள் மட்டுமே. யாரேனும் வாங்கியவர்கள் கொஞ்சம் கொஞ்சம் வெளியே விட்டால் கூட போச்சி….பற்றிக்கொள்ளும்.