குடை வேண்டுமா?

இடையில் குளிக்கப் போவதும் சாப்பிடுவதும் தவிர, காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கிறேன்.  காலையில் ஒரு மணி நேர நடை. மற்றபடி எதற்குமே வெளியே செல்வது இல்லை.  இப்படியே ஆறு ஏழு நாள் போனால் மனம் சோர்வுறும் இல்லையா?  அப்போது ஏதாவது ஒரு வெப்சீரீஸ் பார்ப்பேன்.  அதுவும் முக்கால் மணி நேரத்துக்கு மேல் இல்லை.  இப்படியே பத்து எபிசோட் உள்ள சீரீஸைப் பார்த்து முடிக்க மூன்று மாதம் … Read more

ஆர்த்தோவும் சார்த்தரும் (திருத்தப்பட்டது)

அந்தோனின் ஆர்த்தோ பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு சார்த்தர் பற்றியும் ஞாபகம் வரும்.  ஆர்த்தோவின் காலம் 1896 – 1948.  சார்த்தரின் காலம் 1905 – 1980.  ஆர்த்தோவை விட சார்த்தர் ஒன்பது வயது இளையவர்.  இரண்டு பேரும் சம காலத்தவர்கள்.  சார்த்தர் ஃப்ரான்ஸின் ஹீரோ.  நோபல் பரிசையே மறுத்தவர்.  ஆர்த்தோ வில்லன்.  ஃப்ரான்ஸ் தன்னுடைய வில்லனை என்ன பாடு படுத்தியது என்று இப்போது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.  ஆர்த்தோ- சார்த்தர் இருவரின் எதிர்முரண் பற்றி யோசிக்கும்போது … Read more

பெங்களூரு, கூர்க், ஸ்ரீரங்கப்பட்டணம்

கடந்த நான்கு நாட்களாக ஒரு முக்கியமான, மிக அவசரமான பணியில் ஈடுபட்டிருக்கிறேன். அதன் விவரத்தை அக்டோபர் இறுதியில் அறிவிப்பேன். இதற்கிடையிலேயே ஒரு நீண்ட சிறுகதை எழுதினேன். அதில் கொக்கரக்கோவின் பெயரை மிஸ்டர் மாற்றுக் கருத்து என்று மாற்றி விட்டேன். எதைச் சொன்னாலும் மாற்றுக் கருத்தை மேஜையில் வைத்துக் கொண்டிருந்தான் கொக்கரக்கோ. அதனால் இந்தப் பெயர் மாற்றம். நக்கீரனுக்கும் சிவபெருமானுக்கும் பெண்களின் கூந்தல் மணம் பற்றி விவாதம் வந்தது போல் எனக்கும் மிஸ்டர் மாற்றுக் கருத்துவுக்கும் ஒரு விவாதம் … Read more

கோயம்பத்தூர் புத்தக விழா

கோயம்பத்தூரில் நடந்து கொண்டிருக்கும் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் என் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். அரங்கம் எண்: 239, 240, 265, 266. ஜூலை 21 முதல் ஜூலை 30 வரை. கொடிசியா தொழிற்காட்சி வளாகம், கோவை.

அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்

ஆர்த்தோ பற்றிய நாடகத்திற்கு ஆங்கிலத்தில் Antonin Artaud: The Insurgent என்றும் தமிழில் மேலே குறிப்பிட்டவாறும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நண்பர் அ. ராமசாமி நாடகத்தில் சில திருத்தங்களைக் குறிப்பிட்டார். அந்தத் திருத்தங்களையும் செய்து விட்டேன். நாடகத்துக்கான தமிழ்த் தலைப்பும் அ. ராமசாமி வைத்ததுதான். இப்போது அந்த நாடகத்தின் பிடிஎஃப் வடிவத்தை அதை வாசிக்க விரும்புபவர்களுக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறேன். அதற்கான விலை அல்லது நன்கொடையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். நாடகத்தை தமிழில் அரங்கேற்றம் செய்ய முடியும் என்றே … Read more

ஆர்த்தோ நாடகத்தைக் காண்பதற்கான ஒரு முன் தயாரிப்பு

Antonin Artaud: The Insurgent ஆர்த்தோ பற்றிய நாடகத்தை சில நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன்.  அவர்கள் அனைவருக்குமே நாடகத்தைப் படித்ததும் ஒரு ‘இன்ப அதிர்ச்சி’ ஏற்பட்டது என்றே அவர்களின் எதிர்வினையிலிருந்து தெரிந்து கொண்டேன்.  வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு ஆச்சரிய உணர்வு அவர்கள் பேசும் போது எனக்குத் தெரிந்தது.  சீனியிடம் இதை என்.எஃப்.டி.யில் விடலாமா என்று கேட்டேன்.  வேண்டாம், நாடகங்களுக்கு வரவேற்பு இருக்காது என்று சொல்லி விட்டார். இம்மாதிரி விஷயங்களில் சீனி பேச்சுக்கு மறு பேச்சு … Read more