அசோகமித்திரனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் உரை
நேற்று நடந்த அசோகமித்திரன் நினைவு கூட்டத்திற்கு வாசகர் வட்டத்திலிருந்து ஒருவர் கூட வரவில்லை. ஆர்கே கன்வென்ஷன் செண்டரில் 365 தினங்களும் சங்கீத நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அரங்கம் நிறைந்து விடும். அவர்கள் மட்டுமே நேற்றும் வந்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும் வாசகர் வட்ட அட்மின் ஸ்ரீராமும் மற்றும் இலக்கியத்துக்குச் சம்பந்தமே இல்லாத என் பார்க் நண்பர்களும் மட்டுமே வந்திருந்தனர். நன்றி. இனிமேல் உங்கள் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காதீர்கள். அசோகமித்திரன் எனக்கு மாதா பிதா குரு தெய்வமானவர். அவர் பற்றி நான் நேற்று … Read more
Reading of Marginal Man at Goobe’s Book Republic Bangalore
Mar23 Reading of ‘Marginal Man’ by author Charu Nivedita March 23 Fri 18:00 · Goobe’s Book Republic · Bangalore, India
23rd March at Goobe Book Store, Bengaluru
நான் ஒரு perfectionist. தயிர் சாதம் சாப்பிட்டால் கூட அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாம் போட்டு மோர் மிளகாய் கொண்டு தாளிக்க வேண்டும். தயிர் புளித்திருக்கக் கூடாது. பெண்கள் பூப்பு எய்துவதைப் போல, காலையில் சூரியன் உதயமாவதைப் போல பால் எப்போது தயிராக மாறுகிறது என்று தெரியாத நிலையில் அந்தத் தயிரைத்தான் பயன்படுத்த வேண்டும். தயிர் ஆவின் பாலில் உறையேற்றியதாக இருக்கக் கூடாது. பசும்பால் அல்லது எருமைப்பால். சாப்பிட்டு விட்டு கையைக் கழுவினால் … Read more
அசோகமித்திரன் : கலையும் வாழ்க்கையும்
வருகின்ற புதன்கிழமை 21-ஆம் தேதி மாலை 6.15 மணி அளவில் லஸ் கார்னரில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் செண்டரில் அசோகமித்திரன் : கலையும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன். சுமார் ஒன்றரை மணி நேரம் பேசலாம் என்று திட்டம். அசோகமித்திரன் பற்றி எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பேசலாம். ஆர்.கே. கன்வென்ஷன் செண்டர் லஸ் கார்னரில் விவேக் அண்ட் கோவுக்கு நேர் எதிரில் மாடியில் உள்ளது. முடிந்தால் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
அழகியசிங்கர் சிறுகதைகள்
நேற்று ரைட்டர்ஸ் கஃபே என்ற இடத்தில் (சத்யம் தியேட்டர் எதிரே உள்ளது) அழகியசிங்கரின் சிறுகதைகள் பற்றிப் பேசினேன். அதன் இணைப்பு கீழே. இதை சாத்தியப்படுத்திய ஷ்ருதி டிவி கபிலனுக்கு என் நன்றி…