புத்தகக் காட்சி

முந்தாநாள் புத்தகக் காட்சிக்கு திடீரென்று சென்றிருந்தேன்.  உயிர்மை ஸ்டாலில் ஒரு மணி நேரம் இருந்தேன்.  ரெண்டு பேருக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.  பக்கத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் சுமார் ஐம்பது பேருக்கும், அராத்து சுமார் இருபது பேருக்கும் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.  சந்தோஷமாக இருந்தது.  ஏன் என்றால் ஒருமுறை திருவனந்தபுரத்தில் Hey Literary Festival -இல் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தேன்.  அது ஒரு சர்வதேச விழா.  திருவனந்தபுரத்தில் எனக்கு ஒரு சினிமா நடிகருக்கு உரிய வரவேற்பு உண்டு.   என்னோடு புகைப்படம் … Read more

முகநூல் அடிமைகளுக்கு…

தொல்காப்பியரையும் திருமூலரையும் பல ஆண்டுகள் சென்று திரும்பவும்  வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  ஒரு பெண்ணுக்கு மாத விடாய் முடிந்து எத்தனை நாள் கழித்து உடலுறவு கொண்டால் கரு தரிக்கும் என்ற விபரத்தைக் கூட தொல்காப்பியர் எழுதியிருக்கிறார்.  பிரமிப்பாக உள்ளது.    திருமூலரின் கீழ்க்கண்ட பாடலைப் பாருங்கள்.  இதன் அர்த்தம் பற்றி யோசியுங்கள். அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி எண்டிசை சூழ்ந்த லிங்கம் எழுகோடி அண்ட நடஞ்செயும் ஆலயந் தானே