எக்ஸைல் 2

இப்போதைக்கு வசதிக்காகத்தான் எக்ஸைல் 2 என்ற பெயர்.  இன்னும் நாவலுக்குத் தலைப்பு வைக்கவில்லை.  பல ஆண்டுகளாக மனுஷ்ய புத்திரன் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார், என்னுடைய நாகூர் வாழ்க்கையை எழுதச் சொல்லி.  எக்ஸிஸ்டென்ஷியலிஸம் நாவலில் வந்ததெல்லாம் சும்மா இணுக்கு.  அதேபோல் திர்லோக்புரி தவிர என்னுடைய பனிரண்டு ஆண்டுக் கால தில்லி வாழ்க்கையையும் நான் எழுதியதில்லை.  இந்த இரண்டும் எக்ஸைல் 2-இல் உள்ளது என்பதை இப்போது தெரிந்து கொண்டேன்.  நாவலை எடிட் பண்ணுவதற்காக இரண்டு பேரிடம் கொடுக்க வேண்டும் என்று … Read more

புத்தகக் கண்காட்சி – இன்று மாலையும்…

நேற்று புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன்.  இரண்டு மணி நேரம் இருந்தேன்.  புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களில் ஒருவரான ஒளிவண்ணன் எனக்குக் கொடுத்த எல்கேஜி புத்தகங்களை உயிர்மை ஸ்டாலில் ஒளித்து வைத்து விட்டு வந்து விட்டேன்.  அதை வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.  ஜாங்கிரி பொட்டலம் மாதிரி அதை எனக்குப் பரிசு கொடுத்தார்கள்.  இது போன்ற விஷயங்களில் எனக்கு சகிப்புத்தன்மை கம்மி.  உதாரணமாக, நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்காததற்கு முக்கியமான காரணம், அதில் வரும் விளம்பரங்கள்தான். எல்லோரும் புத்தகக் … Read more