வாசகர் வட்டத்திலிருந்து இன்னொரு இளம் எழுத்தாளர்…

கருந்தேள் ராஜேஷ், அராத்து, கணேஷ் அன்பு, கார்ல் மார்க்ஸ்… இன்னும் புத்தகமாக வர வேண்டியவர்கள் செல்வகுமார் கணேஷ், நிர்மல் (இவரிடம் எக்கச்சக்கமான சரக்கு இருக்கிறது), ஜெகா, பூர்ணசந்திரன்… இப்போது என் மனம் கவர்ந்த, தஞ்சாவூர் மண்ணைச் சேர்ந்த பிரபு காளிதாஸ்… (மை டியர் பிரபு, வெளியீட்டு விழாவுக்கு மட்டும் என்னை அழைத்து விடாதீர்கள்.  ப்ளீஸ்.  வேண்டுமானால் இரண்டு பேரும் ராயர் கஃபேவில் தனியாக ஒரு வெளியீட்டு விழா வைத்துக் கொள்ளலாம்.  இம்சை இல்லை…)

முகநூலில் செல்வகுமார்…

செறிவான கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுபவர்கள்கூட தங்கள் மூளையை எங்காவது அடமானம் வைக்க முடியும் என்றால், காலாகாலத்துக்கும் அவர்கள் இலக்கியத்தில் சேர்த்தவை அனைத்தும் குப்பை என்று ஆகிவிடாதா? உயிர் பிரிந்தால், அடுத்த நிமிடத்திலிருந்து உடல் அழுகத் தொடங்கிவிடுவது போல, சார்பற்ற நிலை அழிந்தால் மனம் இப்படி அழுகத் தொடங்கிவிடுவது இயல்புதான். அள்ளி புதைத்துவிட்டு போக முடியுமே தவிர அதன்பின் அந்த மனம் உருவாக்கும் எழுத்தை ஏறெடுத்தும் பார்க்கமுடியுமா? எழுத்து முதலில் எழுதியவன் மனதை செம்மைபடுத்த வேண்டும். அப்போதுதான் … Read more

மனுஷ்ய புத்திரன் மன்னிக்க வேண்டும்…

இதுவரை முகநூலில் மனுஷ்ய புத்திரன் என்னைத் திட்டி பல பதிவுகள் போட்டிருக்கிறார்.  நாலைந்து ஆண்டுகளாக.  அவ்வப்போது அவற்றை எனக்கு நண்பர்கள் அனுப்பி வைப்பதும் உண்டு.  நான் எதற்குமே பதில் எழுதியதில்லை.  எதிர்வினை ஆற்றியதில்லை.  இப்போதும் அதேபோல் என்னைத் திட்டி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.  என் பெயர் இல்லாவிட்டாலும் அது நான் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  நான் யாருடைய புத்தக வெளியீட்டுக்கும் செல்ல விரும்புவதில்லை.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு உயிர்மை எழுத்தாளரின் புத்தக வெளியீட்டுக்கு … Read more

விழா பதிவுகள் – 30

உமா ஷக்தி முகநூலில், 28.2.16 அன்று எழுதிய பதிவு:   புகைப்படம்: பிரபு காளிதாஸ் சாரு எழுதிய அத்தனை புத்தகங்களையும் நான் படித்ததில்லை. ஆனால் ராஸ லீலா உட்பட முக்கியமான புத்தகங்களை படித்துள்ளேன். சாருவின் எழுத்தில் என்னை எப்போதும் கவர்வது தங்குதடையில்லாத எவ்வித மனத்தடையும் (inhibitions) இல்லாத ஒரு மொழிநடை. பிரவாகமாக, எளிமையாக, மிகவும் நேரடியாக நம்முடன் உரையாடும் மொழி அவருடையது. அவருடைய புதிய எக்ஸைல் நூறு பக்கங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். நேற்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு முழுவதும் … Read more

விழா பதிவுகள் – 29

தினமணியில் விழா பற்றிய செய்தி: http://bit.ly/1OV2uFq *** சில புகைப்படங்கள்: இடமிருந்து இரண்டாவதாக: DCP திரு.ராமகிருஷணன் தர்மசேனனுடன் மக்களில் ஒரு பகுதி. மேலே உள்ள படங்கள்: பிரபு காளிதாஸ்   ஜெகா, மனாசே  

விழா பதிவுகள் – 28

அழகிய சிங்கர் முகநூலில்: சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு அசோகமித்திரன், வைதீஸ்வரன் சகிதமாக சென்றிருந்தேன். சாருநிவேதிதா அக் கூட்டத்தில் ஒன்று சொன்னார். எழுத்தாளர்களை நாம் யாரும் கொண்டாடுவதில்லை என்று. அவர் சொன்னது உண்மையான வார்த்தை. சாரு இன்னொன்று சொன்னார். எழுத்தைத் தவிர நான் வேறு எதுவும் யோசிப்பதில்லை என்று. கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன், அசோகமித்திரன், எஸ்.ரா., அம்ஷன் குமார் அசோமித்திரன், அழகிய சிங்கர், ஓவியர் ஸ்ரீனிவாசன் உண்மையில் நான் பழகிய பல நண்பர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அசோகமித்திரனை எடுத்துக் … Read more