T.R. Vivek

என்னுடைய சிந்தனையின் போக்கிலேயே மாற்றம் உண்டாக்குகின்ற அளவுக்கு ஆளுமை கொண்ட நண்பர் ட்டி.ஆர். விவேக்.  ஆங்கிலப் பத்திரிகையாளர்.  என் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளியாவதற்கு முழுமுதல் காரண கர்த்தா இவர்தான்.  நேரில் பார்த்துப் பேசியதில்லை.  பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும், ஆங்கிலத்தில் இயங்கும் பல தமிழர்கள் என்னையும் என்னுடைய எழுத்தையும் மிகக் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் எழுதுவதைப் பார்க்கும் போது இவர்களுக்கு நம் மீது என்ன கோபம் என்று நான் நினைப்பதுண்டு.  அவர்களுடைய எழுத்தில் என் மீதான அருவருப்பு மட்டுமே அதில் … Read more

பிளாக் நம்பர் 27, திர்லோக்புரி

தில்லியில் இதுவரை ஏழு வீடுகள் மாற்றி இப்போது இந்த மயூர் விஹார் வீடு எட்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை. வீடு என்றால் எதுவும் தனி வீடு அல்ல. ஒண்டுக்குடித்தனம்தான். அநேகமாக எல்லா வீடுகளிலும் வீட்டுச் சொந்தக்காரர்களுடன் தான் குடியிருக்க நேர்ந்தது. ஒரு வீட்டில் வீட்டுக்காரர் தீவிர ராமபக்தர். குளிர்காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து ராமபஜனை. குளிர்காலமாக இருப்பதால் கண்ணாடி ஜன்னல்களெல்லாம் மூடியிருக்கும். வீட்டுக்காரர் தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்தும் ‘ஓம் ஜெய ஜெகதீச ஹரி! … Read more

அந்நியன் – 2

முன்பு போல் இருந்திருந்தால் அயோக்கியத்தனம், கயவாளித்தனம் என்றெல்லாம் எழுதியிருப்பேன்.  இப்போது எல்லாவற்றையும் கடவுளிடம் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறேன்.  என்றைக்கு இருந்தாலும் திலீப்குமார் செய்த அதர்மமான காரியத்துக்கு அவர் இறைவனிடம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.  ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் பாலமாக விளங்கும் தமிழ் இலக்கிய தாதாக்களில் ஒருவரான திலீப்குமார் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியான The Tamil Story என்ற தலையணை சைஸ் தொகுப்பில் சி.என். அண்ணாதுரையின் சிறுகதையைக் கூட தேர்வு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.  சி.என். அண்ணாதுரையை விட நான் … Read more