கோவா நாட்குறிப்புகள் (2)

நாளைக்குள் ஔரங்கசீப் நாவலின் ஐந்து அத்தியாயங்களை அனுப்ப வேண்டும்.  இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  எழுத ஆரம்பிக்கவில்லை.  நேற்றுதான் ஜஹானாரா பேகத்தின் சுயசரிதை கிடைத்தது.  இரவுக்குள் முடித்து விடலாம் என்று பார்த்தால் ஒன்பதரைக்கே உறக்கம் கண்களைச் சுழற்ற ஆரம்பித்து விட்டது.  படுத்து விட்டேன்.  படுத்த உடனேயே எனக்குப் பிரக்ஞை போய் விடும்.  மரணம் மாதிரிதான்.  காலை நான்கு மணிக்குத்தான் உயிர்த்தெழுதல். இத்தனை கெடுபிடியான நிலையில் இதை ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால், மனம் பூராவையும் வேறொரு எண்ணம் … Read more

தியாகராஜா

வணக்கம் சாரு சார், “நான்தான் ஔரங்கசீப்…” வாசித்துக் கொண்டிருக்கிறோம். புதுமையாகவும் கூடவே விசித்திரமாகவும் உள்ளது. இது சாருதானா? இல்லை, உண்மையிலேயே நாவலில் உள்ளது போல் பேய் ஏதாவது பிடித்துத்தான் எழுதுகிறாரா எனத் தோன்றுகிறது. உழைத்த உழைப்பை அணுக் கூட நாவலில் தெரியப்படுத்தாமல், ஒவ்வொருவரின் சுய சரிதம் மூலம், அவர்கள் சொல்வது போல் காட்டி இருக்கிறீர்கள். ஆனால் இந்தக் கடிதம் ஔரங்கசீப் பற்றி அல்ல, அடுத்ததாக எழுதப்போகும், தியாகய்யர் பற்றியது. மோகமுள் நாவலை ஒலிச்சித்திரமாக கேட்டுக்கொண்டு இருந்த போது, … Read more

கோவா நாட்குறிப்புகள் (1)

வெளியுறவுத் துறையில் ஐஏஎஸ்ஸாக இருந்தாலும் கோபால் மிகவும் அடக்கமானவர்.  தன் பதவி பற்றி யாரிடமும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்.  எந்த பந்தாவும் கிடையாது.  கோவாவிலிருந்து திரும்பியதும் எனக்கு ஃபோன் செய்து “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள் சாரு, திருத்திக் கொள்ளலாம்” என்றார்.  யார் கேட்பார் இப்படி?  இப்படிக் கேட்டதால் சொல்கிறேன்.  செந்தில் நன்கு சமைக்கக் கூடியவர்.  பிரமாதமாகச் செய்வார்.  அவரும் கோபாலும் மீன் வாங்கக் கிளம்பினார்கள்.  நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இடம் … Read more

ஆண் – பெண்

பரீட்சைக்குப் படிப்பது போல் நான் விழுந்து விழுந்து படித்த நாவல் தருணின் ஆல்கெமி ஆஃப் டிஸையர்.  அதில் ஒரு இடம் வரும்.  காதலி, ஆண்களின் பாலியல் நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யும் மாணவி.  தன் காதலனிடமிருந்தே தொடங்கலாம் என்று முடிவு செய்வாள் அவள்.  இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருப்பார்கள்.  முழு நேரமும் கலவிதான்.  முழு நேரமும்.  அவள் முதல் கேள்வியைக் கேட்கிறாள்.  நீ சுயமைதுனம் செய்வதுண்டா? இல்லை என்றுதான் சொல்வான் என்பது அவளுடைய திண்ணமான முடிவு.  எந்நேரமும் … Read more

மூன்று கட்டளைகள்

என் வாழ்வில் சீனி அளவுக்கு சுவாரசியமான ஒரு மனிதன் இல்லை. ஒரு உதாரணம் தருகிறேன்.  அப்பா ஆசிரியர்.  சின்ன ஊர் என்பதால் அப்பாவுக்கு செம மரியாதை.  அம்மாவும் ஆசிரியை.  இருவருமே அரசு ஆசிரியர்கள் என்பதால் மற்ற பல ஆசிரியர்களைப் போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை இல்லை.  நடுத்தர வர்க்கம்.  என் நைனா பிச்சை எடுத்த வாத்தியார்.  தனியார் பள்ளி என்பது ஒரு காரணம்.  ஆறு குழந்தைகள் இன்னொரு காரணம்.  ஆனால் சீனி எனக்கு அடுத்த தலைமுறை.  … Read more