கோவா நாட்குறிப்புகள் (1)

வெளியுறவுத் துறையில் ஐஏஎஸ்ஸாக இருந்தாலும் கோபால் மிகவும் அடக்கமானவர்.  தன் பதவி பற்றி யாரிடமும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்.  எந்த பந்தாவும் கிடையாது.  கோவாவிலிருந்து திரும்பியதும் எனக்கு ஃபோன் செய்து “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள் சாரு, திருத்திக் கொள்ளலாம்” என்றார்.  யார் கேட்பார் இப்படி?  இப்படிக் கேட்டதால் சொல்கிறேன்.  செந்தில் நன்கு சமைக்கக் கூடியவர்.  பிரமாதமாகச் செய்வார்.  அவரும் கோபாலும் மீன் வாங்கக் கிளம்பினார்கள்.  நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இடம் … Read more

ஆண் – பெண்

பரீட்சைக்குப் படிப்பது போல் நான் விழுந்து விழுந்து படித்த நாவல் தருணின் ஆல்கெமி ஆஃப் டிஸையர்.  அதில் ஒரு இடம் வரும்.  காதலி, ஆண்களின் பாலியல் நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யும் மாணவி.  தன் காதலனிடமிருந்தே தொடங்கலாம் என்று முடிவு செய்வாள் அவள்.  இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருப்பார்கள்.  முழு நேரமும் கலவிதான்.  முழு நேரமும்.  அவள் முதல் கேள்வியைக் கேட்கிறாள்.  நீ சுயமைதுனம் செய்வதுண்டா? இல்லை என்றுதான் சொல்வான் என்பது அவளுடைய திண்ணமான முடிவு.  எந்நேரமும் … Read more

மூன்று கட்டளைகள்

என் வாழ்வில் சீனி அளவுக்கு சுவாரசியமான ஒரு மனிதன் இல்லை. ஒரு உதாரணம் தருகிறேன்.  அப்பா ஆசிரியர்.  சின்ன ஊர் என்பதால் அப்பாவுக்கு செம மரியாதை.  அம்மாவும் ஆசிரியை.  இருவருமே அரசு ஆசிரியர்கள் என்பதால் மற்ற பல ஆசிரியர்களைப் போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை இல்லை.  நடுத்தர வர்க்கம்.  என் நைனா பிச்சை எடுத்த வாத்தியார்.  தனியார் பள்ளி என்பது ஒரு காரணம்.  ஆறு குழந்தைகள் இன்னொரு காரணம்.  ஆனால் சீனி எனக்கு அடுத்த தலைமுறை.  … Read more