மெஜந்த்தா

நான் வண்ணங்களின் ரசிகன். பிஸ்மில்லா பாடலை தினமும் முப்பது தடவையாவது கேட்டு விடுவேன். எழுதிக் கொண்டிருக்கும்போது அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். இந்தப் பாடலில் கைலாஷ் அணிந்திருக்கும் வாடாமல்லி நிறச் சட்டைத் துணியை எங்கேயாவது பார்த்தால் எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் வாங்கி விடுவது என்ற வெறியில் இருக்கிறேன். நாளை என்பதே நம் கையில் இல்லை என்கிறார் புனித். ஆனால் ஹெடோனிஸ்டுகளுக்கு ஒவ்வொரு நிமிடமும் கொண்டாட்டம்தான். கேம் ஆஃப் த்ரான்ஸ் படத்தில் … Read more

vibrations…

25 ஆண்டுகளுக்கு முன்பு. ஸீரோ டிகிரி வெளிவந்த நேரம்.  பல பத்திரிகைகளில் சர்ச்சையாக இருந்தது.  சீ அசிங்கம், மலம்.  இந்த மாதிரி.  தினமலரில் மட்டும் என் நண்பர் ரமேஷ் ஸீரோ டிகிரியிலிருந்து ஐந்து பக்கங்களை எடுத்து வாரமலரில் வெளியிட்டு, மணியார்டரில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள என் விலாசத்தையும் கொடுத்தார். பின்னால் பிரச்சினை வந்து விடக் கூடாது என்று புத்தகத்தை முழுமையாகவே படித்து விட்டுத்தான் செய்தார்.  800 மணியார்டர்கள் வந்தன.  (நான்தான் புத்தகத்தை வெளியிட்டவன்.  தமிழில் எந்தப் பதிப்பகமும் … Read more

ஓப்பன் பண்ணா: An existentialist classic on ‘Ennui’

இன்று தமிழில் பெருவாரியாக எழுதப்படும் எதார்த்த பாணி எழுத்து எப்படிப்பட்டது? அவ்வகை எழுத்தை உருவாக்குபவர்கள் மனித வாழ்க்கையை மாட்டுத் தொழுவத்தைப் போல் காண்பவர்கள் என்று கருதுகிறேன். மாடுகளுக்கு என்ன தேவையோ அது மனிதர்களுக்கும் கிடைத்து விட்டால் போதும் என்று நினைக்கும் ’ஸில்ஸிலா’ அது. அப்படி நினைத்த கம்யூனிசம் என்ன ஆயிற்று என்று நம் எல்லோருக்கும் தெரியும். வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் அளவுக்கு நாம் நம்மைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு … Read more

ரமண மஹரிஷி, தலப்பாக்கட்டி பிரியாணி, ‘ஆன்வி’, எதார்த்த பாணி எழுத்து, ஓப்பன் பண்ணா… (Revised)

ஐயா, நான் மிகவும் வியப்பது பிரமிப்பு அடைவது திருவாளர்கள் ———————— போன்ற எழுத்தாளர்களை.  இவர்களது நாவல்கள் கி்.ரா. அவர்கள் போல் வட்டார வழக்கு நடை.  போலித்தனம் இல்லை. அடித்தட்டு மக்களை யதார்த்தமாக சித்தரிக்கிறது. இவர்களது நாவல்கள் இந்தி, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட இலக்கிய சாதனையாளர்கள் தங்களின் பழுப்பு நிறப் பக்கங்கள் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட வேண்டும். பாலா. டியர் பாலா சார், தாங்கள் என்னை விட … Read more

அய்யர் ப்ளாக்

யாவரும் கேளிர் என்று நினைக்கும் எனக்கு ஜாதிப் பற்றோ ஜாதி வெறுப்போ எப்படி இருக்க முடியும்? அதனால் எனக்கு ஜாதி என்பது ஒரு பெயர் மாதிரிதான். என்னால் ஒருத்தரை செட்டியார் என்றோ நாயுடு என்றோ அய்யர் என்றோ கூப்பிட முடியும். அது ஒரு பெயர். இன்றைய தினம் நகர வாழ்வில் அதுதான் நடந்துள்ளது. எனக்கு நகரம்தான் தெரியும். கிராமத்தில் இப்படி இல்லை என்றும் தெரியும். இந்த நண்பரை அய்யர் என்றே அழைத்து வருகிறேன். பிரஸன்ன வெங்கடேசன் என்று … Read more

இரண்டு குறிப்புகள்

என் ஆக்ஸிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டைகள் கடந்த இருபது மாதங்களாக ஆன்லைன் பயன்பாட்டுக்கு உதவுவதில்லை. வங்கி மறுத்து விடுவதாக அறிவிப்பு வருகிறது. போனில் கேட்டால் நேரில் வா என்கிறார்கள். ஐசிஐசிஐ வீட்டுக்கு எதிரே உள்ளது. இருபது மாதங்களாக நேரில் செல்ல நேரம் இல்லை. ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிக்கு போன் செய்தால் இதோ அதோ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக ஸ்ரீராம் மற்றும் அன்னபூர்ணி மூலம் சாமான்களைத் தருவித்துக் கொண்டு பெரிய … Read more