யார் அந்த பப்ளிஷர்?

கேள்வி: சாரு, யார் அந்த பப்ளிஷர் உங்களுக்கு சாபம் விட்டது? நீங்கள் அது பற்றிச் சொல்லவே இல்லையே? வினித், கும்பகோணம். பதில்: ஏங்க வினித், என் உள்வட்டத்தில் இருந்து கொண்டே இந்தக் குசும்பு? அவர் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் விட்ட சாபம் இப்போதுதான் expire ஆகும்போல் தெரிகிறது. இப்போது அவர் பெயரை வேறு கேட்டு, யாராவது என் நலம்விரும்பி அவரிடம் போய் அதைச் சொல்லி, அந்த சாபத்தை அவர் மீண்டும் உயிர்ப்பிக்கவா? வாயைக் கிளறாதீர்கள். ஔரங்கசீப் … Read more

லிஃப்கோ டிக்‌ஷனரியும் க்ரியாவும்…

ஒரு நெருங்கிய நண்பர் நேற்று போன் செய்து “30 ஆண்டுகளுக்கு முன்னால் நிறப்பிரிகையிலோ அல்லது வேறு எதிலோ க்ரியா டிக்‌ஷனரி வெளிவந்த புதிதில் அதை விட லிஃப்கோ டிக்‌ஷனரியே தேவலாம் என்பது போல் எழுதியிருந்தீர்களே, ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டார்.  நன்றாக ஞாபகம் உள்ளது என்றேன்.  அப்புறம் எப்படி இப்போது க்ரியா டிக்‌ஷனரி ராமகிருஷ்ணனின் முக்கியமான பங்களிப்பு என்று சொல்கிறீர்கள் என்று கட்டையைப் போட்டார். கொஞ்சம் திகைத்த நான் “கனிந்து விட்டேன் போலிருக்கிறது” என்று சமாளித்தேன்.  அப்போதும் … Read more

இப்படிச் சொன்னால்தான் புரியுமா?

புதுவை ஞானம் என்று ஒரு நண்பர். 35 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரியில் பழக்கம். எல் ஐ சியில் வேலை. அப்போதைய எல் ஐ சி சம்பளம் எங்கள் அரசாங்க சம்பளத்தையெல்லாம் விட மூன்று மடங்கு ஜாஸ்தி. பொதுவுடைமைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். அவர்தான் அந்தப் பத்திரிகையை எனக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு நான் ஃபிடல் காஸ்ட்ரோவுக்குக் கடிதம் எழுதிப் போட்டு, அந்தப் பத்திரிகை பல காலம் எனக்கு வந்து கொண்டிருந்தது. ஏழை எழுத்தாளன், சந்தாவெல்லாம் அனுப்ப முடியாது என்று … Read more