அ. மார்க்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சமீபத்தில் ஒரு நண்பர் அ. மார்க்ஸை எங்கே பார்க்க முடியும் என்று கேட்டார். மனிதன் எங்கெல்லாம் துயருறுகின்றானோ, எங்கெல்லாம் ஒடுக்கப்படுகின்றானோ அங்கெல்லாம் அ. மார்க்ஸைப் பார்க்க முடியும் என்றேன். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். கடந்த வாரம் ஒரு என்கௌண்டர் மரணம். அடுத்த நாள் அந்த இடத்தில் அ. மார்க்ஸ் நிற்கிறார். எனக்கு அ. மார்க்ஸை நினைக்கும் போதெல்லாம் Saint Paul of the Cross ஞாபகம் வருவார். துயரப்படுவோரையெல்லாம் தேடித் தேடிப் பணி செய்த ஒரு மகான் … Read more

லேடி காகா…

எப்படி எழுதுவீர்கள், எழுதுவதற்கு எப்படிப்பட்ட சூழல் தேவை என்று பலமுறை என்னிடம் நண்பர்களும் வாசகர்களும் கேட்பதுண்டு. அதற்கு உண்மையிலேயே எனக்கு பதில் தெரியாது. ஆனால் ஒரு நாளில் எழுதத் தொடங்குவதற்கு முன் இப்படி ஏதாவது ஒரு பாடலைக் கேட்டு விட்டுத்தான் தொடங்குவேன். இம்மாதிரி இசைதான் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறது. இன்று ஔரங்கசீப்பின் மூன்றாம் பாகத்தை அனுப்ப இருக்கிறேன். இப்போது நடப்பில் இருப்பது மூன்றாம் பாகம். இன்னும் ஒரு பாகம் இருக்கும். நாவலில் அப்படி நான் பாகம் பாகமாகப் … Read more