எழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி
எழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-writings
எழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-writings
காலை நான்கு மணிக்கு எழுந்து கொள்வேன். படுக்கையில் அமர்ந்தபடியே சில மந்திரங்களைக் கேட்பேன். பிறகு சில நிமிடங்கள் ப்ரம்மரி பிராணாயாமம் செய்து விட்டு வந்து பல் துலக்கி விட்டு கையோடு ஒரு கஷாயம் குடிப்பேன். சர்க்கரை, கொழுப்பு போன்ற பிரச்சினைகள் அணுகாமல் இருப்பதற்கான கஷாயம். உடனடியாக பூனைகளுக்கு உணவு கலந்து கொடுப்பேன். அடுத்து, பூனைகளின் மல ஜலம் சுத்தம் செய்வேன். அதற்கு ஒரு பதினைந்து நிமிடம் ஆகும். நாலரை ஆகி இருக்கும். பிறகு சௌந்தர் கற்பித்த யோகா … Read more
No Time To Fuck
தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-boomers
இந்த வாரம் வியாழக்கிழமை இரவிலிருந்து ஞாயிறு இரவு வரை (16இலிருந்து 19 வரை) ஹைதராபாதில் இருப்பேன், நண்பர்கள் யாரேனும் சந்திக்க விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் என்று மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தேன். (charu.nivedita.india@gmail.com) ஒரு நண்பர் ஃபேஸ்புக் காமெண்ட்டில் விருப்பம் தெரிவித்திருந்தார். மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் சிலாக்கியமாக இருந்திருக்கும். நான் ஃபேஸ்புக் காமெண்ட்ஸ் எல்லாம் பார்ப்பதில்லை. எதேச்சையாகப் பார்த்தேன். இன்னொரு நண்பர் இன்பராஜ் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் இதற்கு முன் ஏதேனும் கடிதம் எழுதியிருக்கிறாரா என்று தேடினேன். ஃபெப்ருவரி … Read more
இரண்டு விஷயங்கள்: என்.எஃப்.டி. மூலம் வாங்கும் நூல் ஒரு டிஜிட்டல் அஸெட் என்பதால் இப்போது பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கும் நூல் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து ஐந்து லட்சம் ரூபாய்க்குக் கூட விற்கலாம். காரணம், இந்தியாவின் முதல் என்.எஃப்.டி. நூல் அராத்துவின் நோ டைம் டு ஃபக். இரண்டாவது, அந்த நெடுங்கதையைப் படித்து விட்டு நான் என்ன சொன்னேன் என்பதை அந்த நெடுங்கதைக்கு ஒரு சிறிய முன்னுரையாக எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதுவும் அந்த டிஜிட்டல் நூலில் உள்ளது.