பொறாமை

வாழ்வில் இதுவரை நான் அனுபவிக்காத ஒரு உணர்வு பொறாமை. ஆனால் என்னைப் பார்த்து பொறாமை கொண்டவர்களைப் பார்த்திருக்கிறேன். போயும் போயும் நம்மைப் பார்த்துப் பொறாமை கொள்கிறார்களே என்று ஆச்சரியமும் அடைந்திருக்கிறேன். சமீபத்தில் கூட புத்தக விழாவில் ஒரு சக எழுத்தாளர் என்னைப் பார்த்து பொறாமையில் வெந்து மாய்ந்ததை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான்தான் வித்தியாசமான ஆள் இல்லையா? என்னை ஜெயிலில் தூக்கிப் போட்டால் கூட ஒரு அற்புதமான நாவலோடு வருகிறவன். அதனால் இந்தப் பொறாமை கூட … Read more

பெயர்

நேர்ப்பழக்கத்தில் நான் மிக இனிமையாகப் பழகக் கூடிய ஆள்.  ஆனால் எழுத்தின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் பிம்பம் நான் மிகவும் எதிர்மறையான ஆள் என்பது.  Negative vibesஐப் பரவ விடுபவன்.  இன்றைக்கு சாரு யாரைத் திட்டி எழுதியிருப்பார் என்று தெரிந்து கொள்வதற்காகவே என் இணைய தளத்தைப் படிப்பவர்கள் உண்டு.   இப்போதெல்லாம் நான் எதிர்மறை விமர்சனங்களைக் குறைத்து விட்டேன்.  முக்கியமாக, சினிமா விமர்சனம் எழுதுவதில்லை.  அதுவே பெரும்பாலான எதிர்மறை விமர்சனத்தைக் குறைத்து விட்டது.  படித்தே ஆக வேண்டிய புத்தகம் … Read more

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு: மனுஷ்ய புத்திரன்

சாருவின் ‘அன்பு: ஒரு பின் நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு ‘ நாவலை இரு தினங்களுக்கு முன் படித்து முடித்தேன். அதுகுறித்து எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. கடும் வேலை நெருக்கடி. சாருவின் மின்சார நடை நாவலை இடையறாது படிக்க வைத்தது. அவரது மொழி ஒரு சாகசம். சாருவின் எல்லா எழுத்துகளிலும் ஒரு சமூக சகவாழ்வில் மனிதர்களிடையே நிலவும் ஒவ்வாமைகளையும் கலாச்சார வேற்றுமைகளையும் தொடர்ந்து விவாதிப்பதைக் காணலாம். ஒட்டு மொத்த தமிழ் வாழ்க்கையே இந்த ஒவ்வாமைகளுக்கு … Read more

எழுத்துலகில் ஒரு புதிய புரட்சி

இப்போது எழுதப் போகும் விஷயம் பற்றி சுமார் ஐம்பது கட்டுரைகள் எழுதியிருப்பேன்.  இப்போதும் எழுதுகிறேன்.  இன்னமும் என் உயிர் உள்ள வரை எழுதுவேன்.  எனக்குக் கிடைக்கும் ராயல்டி 1,90,000 ரூ.  மாதமாக வகுத்தால் 16000.  தெருவில் இஸ்திரி போடும் தொழிலாளியின் ஊதியம் 25000.  அதை விட என் ஊதியம் கம்மி.  என் புதிய நாவல் வெளிவந்தால் ஐந்து நாளில் 500 பிரதி விற்கும் ஒரு எழுத்தாளனின் வருமானம் இப்படி என்றால், மற்றவர்களின் நிலையை நான் எழுத வேண்டியதில்லை.  … Read more