முராகாமியும் அடியேனும்…

பின்வரும் கடிதம் 2020 மே இறுதி வாரத்தில் எனக்கு வந்தது. இணைய தளத்திலும் வெளியிட்டேன். நீண்டதொரு பதிலும் எழுதினேன். கார்த்திக் என்ற வாசக நண்பர் எழுதியிருக்கிறார். திருமணமானவர் என்பதால் என் வாசகர் வட்டத்தில் உள்ள கார்த்திக் இல்லை என்று தெரிகிறது. இந்தக் கடிதத்தை எழுதிய கார்த்திக் என்னைத் தொடர்பு கொள்ளவும். என் மின்னஞ்சல் முகவரி charu.nivedita.india@gmail.com கார்த்திக்கின் கடிதம்: அன்புள்ள சாரு அப்பாவிற்கு, என் கண்களில் கண்ணீருடன் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இதுதான். நான் உங்களை … Read more

அன்பு: ஒளி முருகவேள்

நாவல் முழுவதும் அன்பினால் ஏற்படும் ரணங்கள் இருந்தாலும், பெருமாளை வலிகள் வாட்டு வாட்டென்று வாட்டினாலும் சாருவின் வசீகர எழுத்து நடையால் பக்கத்துக்கு பக்கம் சிரிப்பை அடக்க முடியவில்லை. சோகத்தைக்கூட கொண்டாட்டமாய் சொல்லும் அவரது மொழி நம்மை கட்டிப்போடுகிறது. அதுவே அவரது வாழ்வின் தத்துவமாகவும் நமக்கு அள்ளி அள்ளி வழங்கப்படுகிறது. நான் ரசித்துப் படித்த ராஸ லீலாவிற்குப் பிறகு சாருவின் ராட்சஸ விஸ்வரூபம் இது. இதை வாசிக்கம்போது சார்லி சாப்ளினின் திரைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. சாப்ளினின் நகைச்சுவை கலந்த … Read more

அன்பு நாவல் குறித்து: வாஸ்தோ

நேற்று வாஸ்தோவிடமிருந்து ஒரு மெஸேஜ். ”அன்பு நாவலை ரொம்பவே நிதானமாக வாசிக்கிறேன் சாரு.” எனக்கு அது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் ஒரே அமர்வில் ரெண்டு அல்லது மூணு மணி நேரத்தில் படித்து முடித்து விடுகிறார்கள். ராஜேஷுக்கு ஜுரம். அதனால் ஓய்வில் இருந்தார். இப்போது படிக்காதீர்கள் என்று அறிவுரை சொன்னேன். ஏனென்றால், எடுத்தால் வைக்க முடியாது என்பதுதான் காரணம். ஆனால் அதைச் சொல்லக் கூடாது என்று தணிக்கை செய்து விட்டேன். ஆனாலும் என் பேச்சைக் கேட்காமல் நாவலை … Read more