முதல்முறையாக…

முதல்முறையாகக் குழம்புகிறேன். நான்கு பேர் – சீனி, வினித், மற்றும் இரண்டு நண்பர்கள் – உல்லாசம், உல்லாசம்… நாவல் தேறாது என்று சொல்லிவிட்டார்கள். அதாவது, ஒரு பிரமாதமான கதைக்களன் கொண்ட நாவலை நான் பலஹீனமாக எழுதி வீணடித்து விட்டேன். சம்பவங்கள் யாரையும் சரியானபடி போய்ச் சேரவில்லை. சம்பவங்கள் வெறும் சம்பவங்களாகவே இருக்கின்றன. ஆனால், நாவலைப் படித்த வேறு சில நண்பர்கள் இது பெட்டியோவைவிட கனமான நாவல் என்கிறார்கள். அவர்கள் உலக இலக்கியம் பயின்றவர்கள். ஒருவர் எனக்குப் பிடித்த … Read more

பெட்டியோ – என்.எஃப்.டி. & அச்சுப் புத்தகம்: ஒரு விளக்கம்

பெட்டியோ நாவல் அச்சுப் புத்தகமாக வராது, என்.எஃப்.டி.யில் மட்டுமே வெளிவரும் என்று முன்பு சொல்லியிருந்தேன். இப்போது அச்சுப் புத்தகமாக வருகிறது. இது என்னுடைய நம்பகத்தன்மையைக் கெடுக்கும் என்று காயத்ரியும் சீனியும் தெரிவித்தார்கள். அச்சுப் புத்தகமாக வர வேண்டாம் என்பது இருவரின் கருத்து. எப்போதும் சீனி சொல்வதையே கேட்கும் நான் சில சமயங்களில் அவர் பேச்சையும் மற்றும் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். அம்மாதிரி ஒரு நிலை இப்போது. நான் என்.எஃப்.டி.யில் நூறு பேர் வாங்குவார்கள் என்று நினைத்தேன். … Read more

ஆறு ஆண்டுகளுக்கு முன்…

2017இல் என் மகன் கார்த்திக்குக்குத் திருமணம் நடந்தது. திருமணம் மும்பையில். வரவேற்பு சென்னையில். திருமணத்துக்குக் காலையில் போய் விட்டு இரவு திரும்பி விட்டேன். வீட்டில் நாய்கள் தனியாக இருந்தன. சென்னை வரவேற்புக்கு எழுத்தாளர் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். அப்போது எடுத்த புகைப்படம். புகைப்படம்: பிரபு காளிதாஸ் ஜெயமோகனிடம் இப்போது இரண்டு முக்கிய மாற்றங்கள். மீசையை எடுத்து விட்டார். வாழ்நாள் முழுவதும் அணிந்திருந்த கட்டம் போட்ட சட்டையை அதிகம் அணிவதில்லை.

மூன்று சந்திப்புகள்

1.சிறுமியாக இருக்கும்போது இந்தப் பெண் பாடிக் கேட்டிருக்கிறேன். உலகப் புகழ் பெறுவாள் என்று யூகித்தேன். பத்தாண்டுகள் கடந்து விட்டன. இப்போது பிரபலமான பாடகி. க்ருதி விட்டல். நாளை காலை ஆறு மணிக்கு கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் தெற்கு மாடவீதியில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவிலில் பாடுகிறார் க்ருதி விட்டல். நான் அங்கே 5.55க்கு இருப்பேன். நிகழ்ச்சி முடிந்து தெற்கு மாடவீதியின் தொடக்கத்தில் உள்ள (தெப்பக்குளத்துக்கு நேர் எதிரில்) சங்கீதா உணவகத்தில் காலை உணவை முடிக்கலாம். மைலாப்பூரிலேயே நல்ல இட்லி … Read more

உல்லாசம், உல்லாசம்…

உல்லாசம், உல்லாசம்… நாவலை ஆறு ஏழு நண்பர்களுக்கு வாசிக்க அனுப்பி வைத்தேன். இரண்டு பேரைத் தவிர வேறு யாரிடமிருந்தும் தகவல் இல்லை. சிலரைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன். அவர்களுக்கு நேரம் இல்லை. பொதுவாக ஸ்ரீராம் உடனடியாகப் படித்து கருத்து தெரிவித்துவிடுவார். அவரிடமிருந்தும் தகவல் இல்லை. முதல் நண்பர் உல்லாசம், உல்லாசம்… பெட்டியோவை விட பிரமாதமாக வந்திருக்கிறது என்றார். உற்சாகமாக இருந்தது. இரண்டாவது நண்பர், ஒரு நல்ல சப்ஜெக்டை வீணாக்கி விட்டீர்கள், நாவலில் tranquility இல்லை, அது இருந்திருந்தால் … Read more