புத்தக விழா குறிப்புகள் – 4

நேற்று (8.1.2024) விசேஷமான நாள். இரண்டு காரணங்கள். ஒன்று, மாலாடு கிடைத்தது. சாப்பிட்டு பல காலம் இருக்கும். இரண்டாவது, வெளியே பகிர முடியாது. டைட்டானிக் படத்தில் கப்பலின் விளிம்பில் நிற்பார்கள் இல்லையா இருவர்? அது போன்றதொரு அனுபவம். மற்றபடியும் விசேஷமான நாள்தான். ஸீரோ டிகிரி அரங்கில் இருந்த நேரம் பூராவும் கையெழுத்துப் போட்டபடியே இருந்தேன். பலரும் கட்டுக்கட்டாக என் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து கையெழுத்து வாங்கினார்கள். ஒரு புத்தகத்தில் கையெழுத்து வாங்கியவர்கள் ஒன்றிரண்டு பேர்தான். பலரும் பெட்டியோவைத் … Read more

கேரள இலக்கிய விழா

ஜனவரி 11 முதல் 14 முடிய கோழிக்கோட்டில் நடக்க இருக்கும் கேரள இலக்கிய விழாவில் என்னுடைய செஷன் பற்றிய விவரம்: அமர்வு: ஒன்று காலை பத்து மணி Conversations with Aurangzeb Category: Conversation Speakers Charu Nivedita Shiyas Mohammed இரண்டாவது அமர்வு: காலை பதினோரு மணி. பங்கேற்பாளர்கள் சாரு நிவேதிதா ஜெயமோகன் வசுதேந்த்ரா ஜே. தேவிகா (ஒருங்கிணைப்பாளர்) பொருள்: Translating India: A South Indian Context

உல்லாசம், உல்லாசம்… நாவலுக்கு முன்பதிவு செய்வோர் கவனத்துக்கு…

சில நண்பர்கள் சுயவிலாசம், பெயர், தொலைபேசி இலக்கம் போன்ற எந்த விவரமும் இல்லாமல் பணம் அனுப்புகிறார்கள். ஒரு நண்பர் அப்படித்தான் இருபதாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார். அதில் பதினைந்து ஆயிரத்தை பெட்டியோ என்.எஃப்.டி.க்கு வைத்துக்கொண்டு ஐந்தாயிரத்தை உல்லாசம் நாவலுக்கு வைக்கலாம் என்று பார்த்தால் அனுப்பிய நண்பரின் எந்த விவரமும் தெரியவில்லை. அல்லது, இருபத்தைந்தாயிரமாக இருந்தால் உல்லாசம் நாவலின் இருபத்தைந்தாயிரம் ரூபாய் விலையுள்ள பிரதியை அனுப்பலாம். ஆனால் அதற்குமே முகவரி தேவையாயிற்றே? இதை கொஞ்சம் கவனியுங்கள்…

இன்றைய புத்தக விழா

வரும் பத்தாம் தேதி கோழிக்கோடு இலக்கிய விழா செல்கிறேன். பிறகு பதினான்காம் தேதிதான் திரும்புகிறேன். எனவே ஒன்பதாம் தேதி வரைதான் புத்தக விழாவுக்கு வர முடியும். அதன் பிறகு புத்தக விழா முடியும் வரை வர முடியும். புத்தகங்களில் கையெழுத்து வாங்க வேண்டுமெனில் ஸீரோ டிகிரி அரங்கில் என்னை சந்திக்கலாம். 598 C. அரங்கு எலிப்பொந்து மாதிரி இருக்கும். ஆயிரம் புத்தகங்களைப் பதிப்பித்த பதிப்பகத்துக்கு சிங்கிள் ஸ்டால். புத்தக விழா நிர்வாகிகளை கடவுள் பார்த்துக் கொள்வார். வேறு … Read more

புத்தக விழா குறிப்புகள் – 3

இன்று ஃபேஸ்புக்கைத் திறந்தால்தான் தெரிகிறது, நேற்று எப்பேர்ப்பட்ட துரோகச் செயல் நடந்திருக்கிறது என்று. ராம்ஜி எனக்காக சுஸ்வாதிலிருந்து முறுக்கு, மைசூர் பாகு, மாலாடு என்ற தெய்வீகப் பண்டங்களை வாங்கி, புத்தக விழாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். அந்த விஷயமே இன்று ஃபேஸ்புக்கில் காயத்ரியின் பதிவைப் பார்த்தபோதுதான் தெரிந்தது. நான் கொஞ்சம் தாமதாகப் போனேன். அங்கே கைமுறுக்கு இருந்தது. மைசூர் பாகு, மாலாடு விஷயங்கள் அடியேன் அறியேன். முறுக்கு மட்டும் சாப்பிட்டேன். மற்ற ரெண்டும் முன்பே முடிந்து விட்டிருக்கிறது போல. … Read more