எரியும் உண்மை
பயணிகளின் கூட்டமற்றஒரு பருவம்வங்காள விரிகுடாவின்ரௌத்திரத்துக்கு மாறாகஆரவாரமற்ற அமைதியானஅரபிக்கடல் கோவாவின் அஞ்ஜுனா கடற்கரையில்நண்பர்கள் வட்டமாகமணலில் அமர்ந்திருக்கிறோம்கைகளில் மதுக்கோப்பைமணல் குறுகுறுப்பாக உரசஅது ஒரு வித்தியாசமான அனுபவம் ஆளாளுக்கு எது பிடிக்குமென்றுசொல்ல வேண்டுமென்றான் ஒருவன். இசை என்றார் ஒருவர்,பெண்கள் என்றார் மற்றொருவர்பயணம்வாசிப்புஅதற்கு மேல் ஏதுமில்லைஅற்புதங்கள் அருகிப்போனமனித வாழ்வு. சுற்று என் பக்கம் வந்தபோது,மது என்றேன்அது நாக்கில் கசந்துதொண்டையை எரிக்கையில்,ஆன்மா ஒரு கணம் குளிர்கிறது.வெறுமைக்கும் அபத்தத்துக்கும்குடியே பதில் –தற்காலிகமானாலும்,எரியும் உண்மையானாலும். இப்படிச் சொல்லி,என் கோப்பையை உயர்த்தியபோது,ஒருவன் கேட்டான்: “இதற்குப் பின்னால் ஒரு கதைஇருக்க … Read more