கல்லறையிலே உறங்கும் பிரேதம்

நான் துயரக் கதை சொன்னால்சிரிக்கிறது கூட்டம்கண்ணீரில் கட்டப்பட்டசார்லியின் மௌனக் காமெடி போல ஆனால்பிராணிகளின் கதை கேட்டுரணமாகிறது மனம்மோகினிக்குட்டி என் உயிரின் துடிப்புஅவள் கூறினாலும்அந்தக் கதைகளைக்கேட்க முடியவில்லைதாங்க முடியவில்லை இனிய கதைகளும் வேதனையே…பூனைகளுக்கு மனித மொழி புரிகிறதாம்நாயின் அறிவோடு கேட்கிறதாம்காணொலி அனுப்பியிருந்தாள் மோகினி,பார்க்காமலே நீக்கி விட்டேன்பிராணிக் கதை கேட்டாலேஇதயம் உறைந்து போகிறது குறிப்பாக பெண்பூனைக்கதைகள் வாழ்நாள் பூராவும்கர்ப்பம் சுமந்தே திரிகின்றனகுட்டிகளை ஈன்றதும் அதைப்பாதுகாக்க வேண்டும்மழையிலிருந்தும்மனிதனிடமிருந்தும்பிற மிருகங்களிலிருந்தும்கொசுக்களிடமிருந்துகூடகுட்டிகள் உறங்கும் நேரமெல்லாம்விழித்தபடிஅமர்ந்திருக்கும் தாய்ப்பூனை குட்டிகள், தத்தித் தவழ்ந்து,தத்தக்கா பித்தக்கா நடையில்ஊர் திரியும்.குடியிருப்பின் … Read more

புருஷன் -1 நாவல் மதிப்புரை: நிர்மல்

இந்த நாவலுக்கு விமர்சனம் எழுதுவதே இதற்கு செய்யும் துரோகம்தான். ஏனென்றால் விமர்சனம் என்பது வாசித்த படைப்பைப் பற்றிக் கருத்து சொல்வதுதானே? இப்படி கருத்து சொல்வதையும், கருத்து சொல்கிறவரின் நோக்கத்தையும், கருத்தைக் கட்டமைக்கும் மொழியின் ஆற்றல்களையும், அதைப் பயன்படுத்துகிறவரின் மொழிப் புலமையையும் புலமையின்மையையும் சந்தேகிக்க வைப்பது இந்த நாவலில் இழையோடும் உணர்வாக நான் கருதுவதால், விமர்சனத்தை அபத்தமாகவே இந்த நாவல் கருதும். கருதினால் கருதிவிட்டுப் போகட்டும், வேறு வழியில்லை. ஆகையால் விமர்சனம் என்கிற பெயரில் எழுதியதே கீழ்க்காணும் கட்டுரை!    … Read more