சில குறுங்கவிதைகள்

1. ’குடித்தால் உங்கள் மகன்அழுகிறான், சின்ன வயதில்அடித்தீர்களாம்’என்றாள் மருமகள். இப்போதெல்லாம் குடித்தால்நானும் அழுகிறேன். 2. கடும் பணத்தேவைநண்பனை அழைத்தால்ஐந்து லட்சம் வரலாம்வராமலும் போகலாம்அழைக்கவில்லை. 3. சொந்த ஊர்நூறாண்டுப் பழமைஆளரவம் இல்லைபாங்கு சத்தம் கேட்கிறது. 4. கவிதை, கலவி – சொற்கள் தொட மறுக்கும், மௌனம் பேசும். 5 மேகம் பார்த்துக் கொண்டிருக்கும்போதேநீரோவியங்கள் உருமாறுகின்றன

கவிதைத் தொகுப்பு

என்னுடைய கவிதைத் தொகுப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது. பாதி அளவுக்கு திருத்தம் செய்து விட்டேன். கவிதை பற்றிய என் விளக்கம் எதுவும் தொகுப்பில் இருக்காது. ஆத்மார்த்தி மற்றும் நேசமித்ரனிடம் முன்னுரை கேட்டிருக்கிறேன். இருவரும் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். கவிதைகளைத் தொகுத்துக் கொடுத்தவர் எப்போதும் போல் ஸ்ரீராம்தான். 2022இலிருந்து 21.4.2025 வரை எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. ஏப்ரல் இறுதியிலிருந்து இன்று வரை எழுதியதே தனித்தொகுப்பாக வரும் போல் இருக்கிறது. தினமும் இரண்டு மூன்று கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். கவிதை என்றால், அப்படியே காற்றில் … Read more

உருமாற்றம்

பார்வையற்றவனுக்குப் பார்வையும்செவியில்லாதவனுக்கு செவியும்வாய் பேசாதவனுக்கு வாயும்மனம் பிறழ்ந்தவனுக்கு மனமும்நிதியற்றவனுக்கு நிதியும்மதியற்றவனுக்கு மதியும்கிடைத்தாற்போல் மகிழ்கிறேன் இப்போது என்னால்அணில் குஞ்சுகளிடமும்கிளி குயில் மைனா போன்ற பட்சிகளிடமும்மற்றும் இன்னோரன்ன பிராணிகளிடமும்விலங்குகளிடமும்தாவரங்களிடமும்உரையாட முடிகிறதுஒருநாள் தேன்சிட்டுமலரில் தேனுண்ணும்ஒலியைக்கூட கேட்க முடிந்தது இன்னொரு நாள்கரையான் கூடுகளில் கரையான்கள்மண்ணில் புரியும்மௌன உழைப்பைக்காண முடிந்தது இதுவரைவெறும் சொல்லாகவே இருந்தஆன்மா என்பதும்இப்போது அருகில் வந்துஉரையாடுகிறது எல்லாவற்றையும்விட,முதுகில் குத்தி விட்டுமூச்சு வருகிறதா எனகை வைத்துப் பார்ப்போரைமன்னிக்க முடிகிறது

புதிர்

அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் மதுபானக் கூடம் எனக்குப் பிடித்தமானது திறந்த வெளி வேப் புகைக்கத் தடையில்லை கண்ணெதிரே நீச்சல் குளம் இறங்கிக் குளிக்கப் பிடிக்காது பார்க்கப் பிடிக்கும் எப்போது போனாலும் நீச்சல் குளத்தில் சிரித்த முகம் கொண்ட அந்த சிரிப்பு நடிகர் நீச்சலடித்தபடியே இருப்பார் அறுபது வயது என்கிறது விக்கிபீடியா முப்பது கூட சொல்ல முடியாது ஒருநாள் மாரடைப்பில் காலமானார்

ஆல்பெர் கம்யூவும் பயத்தம் பருப்பும்

1 என் அகவை எழுபத்து மூன்றுநூற்றி அறுபது நூல்கள் எழுதியிருக்கிறேன். இன்று காலை என் மனையாள் சொன்னாள்:‘பயத்தம் பருப்புக்கு நிறைய தண்ணீர் வைக்கக் கூடாது, துவரம் பருப்புக்கு வைக்கலாம்.’ ஆல்பெர் கம்யூ தன் ஆயுள் முழுதும்இதையே சொன்னான்அவன் மரணமும் அப்படியே ஆனது லூர்மரினில் இருந்து பாரிஸுக்குஅறுநூற்று அறுபது கிலோமீட்டர்.ரயில் டிக்கெட் வாங்கியிருந்தான். ஆனால் அவன் நண்பன், பதிப்பாளன் மிஷல் காலிமார்,‘வா, என் லக்ஸுரி Facel Vega காரில் போகலாம்’என்றான். ஜனவரி 4, 1960. கடும் பனிப்பொழிவு சாலை கண்ணாடிபோல் … Read more

நிழலுடன் நடனமாடுதல்

பிடித்த கவிஞர்என்பதால் படித்தேன்வாழ்க்கை வரலாறுஎல்லா தேர்விலும் முதல் மதிப்பெண்பொறியியல், பௌதிகம், வானவியல்—சர்வதேச உச்ச நிறுவனங்களிலிருந்துஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பட்டம்கணிதப் பேராசிரியர், பௌதிகப் பேராசிரியர்.நூற்றி ஐந்து வயது வரை வாழ்ந்தார்விளம்பரத்தில் வருவதற்குஹாலிவுட் நடிகைகளின் கட்டணம்.எமது மொழியின் உச்ச கவிஞரெனஇன்னொரு உச்ச கவிஞரால் உறுதி. நான்?பள்ளித் தேர்விலேயே தோல்வி.இருபது ஆண்டுகள் ஸ்டெனோ அடிமைமணமான நாள் முதலாய் குடும்ப அடிமை.குடிக்கவும் உரிமை இல்லை.கவிதை எழுதினால் நிச்சயமாய்உண்டு நூறு வாசகர்அதில் அம்பது பேர் சொல்கிறார்கள்:‘இது கவிதையே இல்லை!”ஒரு சக கவிஞர் ஆறுதல்:‘நம் கவிதை … Read more