கொஞ்சம் பொறுங்கள், வருகிறேன்

தன்னுடைய Minxie நாவலின் ஆங்கிலம் தமிழ் மாதிரி, அல்வா மாதிரி மனதில் போகும் என்று நூற்றுக்கு முந்நூறு முறை சொல்கிறார் அல்லவா அராத்து? அதைப் பார்த்ததும் எனக்கு நானும் ஸ்ரீயும் சேர்ந்து எழுதும் Anatomy of Dissonance நாவலின் மொழி ஞாபகம் வந்தது. அந்த நாவல் எலீட் வாசகர்களுக்காக மட்டுமே எழுதப்படுகிறது. மிகக் கடினமான ஆங்கிலமாக இருக்கும். வேண்டுமென்றே கடினமான ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று எழுதவில்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ் அப்படி நினைத்து எழுதவில்லை அல்லவா? பெட்டியோவின் … Read more

மோடுமுட்டிகளே, கொஞ்சம் விலகியிருங்கள்…

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எனக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் வந்தது. என் பெயர் இன்னது. ஊர் இன்னது. (சென்னைக்கு அருகில் உள்ள ஒரு ஊர்) நீங்கள் கோவா செல்லும் தேதி என்ன? சாலையில் செல்லும் ஒருவரை அழைத்து அவர் கன்னத்தில் அறைந்தால் அந்த ஆள் என்ன ஆவான்? அதேபோல் இருந்தது எனக்கு. எனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் நான் அந்த ஆபத்தை சீனி பக்கம் தள்ளி விட்டு விடுவேன். ஊசித் துளையில் ஒட்டகத்தை அல்ல, காண்டாமிருகத்தையே நுழைத்துப் … Read more

சாம்பார் காவியம்

இருபத்தைந்து வயது வரைஅம்மாவின் சமையல்அம்மியும் விறகு அடுப்பும்பிறகு?பிறர் சமைத்துச் சாப்பிட்டதுவிடுதிகளிலும் தோழிகளின் இல்லங்களிலும் என் வீட்டுச் சமையலில் என் பங்கு எண்பது சதவிகிதம்மனையாள் சிரிக்கிறாள்’எண்பது என்னுடையது!’மீதி இருபதுதான் என் மனையாள்நேரக் கணக்கு வைப்போம்ஒன்றரை மணி நேரம் நான்இருபது நிமிடம் அவள்கணிதத்தில் நான் ‘வீக்’அதனால் சதவிகிதங்கள் சற்றேதடுமாறலாம் வாரத்தில் இரண்டு நாள்சாம்பார் ஒரு பெருஞ்சட்டியில்மதியம் சாம்பார்இரவு சாம்பார்மறுநாள் இட்லிக்கு சாம்பார்மறுபடி மதியம் சாம்பார்மறுபடி இரவு சாம்பார்மறு மறுநாள் இட்லிக்கு சாம்பார்மறு மறுநாள் மதியம் முழித்துக்கொள்வேன்ஸ்விக்கியில் ஆட்டுக்கறிஅவள் சைவம்சாம்பாரே தொடரும் … Read more

MINXIE cover release

MINXIE என்று ஆங்கிலத்திலும் குட்டிமா என்ற பெயரில் தமிழிலும் வெளியாகும் அராத்து எழுதிய நாவலின் அட்டை இங்கே வெளியிடப்படுகிறது. ஆங்கிலப் பதிப்பை நீங்கள் இன்றே வாங்கலாம். இந்தியாவின் அதன் விலை 99 ரூபாய்தான். ஆங்கிலம் மிக மிக எளிமையாக இருக்கும். எந்தத் தயக்கமும் வேண்டாம். இது அமேஸானின் சர்வதேசப் போட்டிக்குப் போவதால் நீங்கள் வாங்குவதைப் பொறுத்துத்தான் போட்டியில் வெல்வது உறுதியாகும். ஏற்கனவே அமேஸான் நாவல் போட்டியில் அராத்துவின் ஓப்பன் பண்ணா நாவல் முதல் பரிசு பெற்றிருக்கிறது. ஐந்து … Read more

சமையல்காரப் பெண்

என் தோழி வீட்டுக்குச் சென்ற போதுபார்த்தேன்இருபத்தாறு வயதாம்எலும்பின் மேல் போர்த்திய தோலாய்பதின்மூன்று வயது தோற்றம்பத்து வீடுகளில் சமைக்கிறாள்காலை ஆறரை, ஏழரை, எட்டரைஒன்பது, பத்து மணி.பிறகு மாலையில் ஐந்து வீடுநாலாயிரம் ஒரு வீட்டுக்குஅம்மாவுக்கு, தம்பிக்கு, தம்பி மனைவிக்கு,அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு…எல்லாம் இவள் கைகளில் திருமணம்?ஹா, கனவு கூட காண முடியாதஒரு உடைந்த கண்ணாடி சிறு வீடு, இரண்டு அறைகள்ஒரு அறையில் தம்பி குடும்பம்மற்றொரு அறையில் அவ்வப்போதுவந்து போகும் தங்கை குடும்பம்இவள்?வராந்தாவில், கழிப்பறை அருகேஒரு துணியில் படுக்கிறாள்இரவு முழுதும் கதவுகள் … Read more

ஏழு லட்சமும் இருநூறும்

ஜாக் ப்ரேவர்எனக்குப் பிடித்த கவிஅவனுடைய பரோல்ஏழு லட்சம் விற்பனைஎன் தொகுதி இருநூறு பிரதிகள் காரணம் தெரியும்,சொன்னால்பைத்தியம் என்கிறார்கள் ஆனால்,மௌனமே என்கவிதையின் மொழி