உதவி வேண்டும்…

என்னுடைய பெட்டியோ நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது.  அடுத்த மாதம் பதிப்பகத்திடம் கொடுத்து விடுவேன்.  மொழிபெயர்ப்பாளருக்கு நான் இரண்டரை லட்சம் கொடுக்க வேண்டும்.  அதில் ஐம்பதாயிரம் கொடுத்து விட்டேன்.  மீதி கொடுக்க வேண்டும்.  வாசக நண்பர்களிடம் கேட்டேன்.  இருபதாயிரம் வந்தது.  கொடுக்க வேண்டிய தொகை இரண்டு லட்சம்.  கிடைத்தது இருபதாயிரம்.  ஒரு இருபது நண்பர்களுக்கு இது பற்றி நான் எழுதியிருந்த வேண்டுகோளை வாட்ஸப்பில் அனுப்பினேன். யாரிடமிருந்தும் பதில் இல்லை.  பணமும் வரவில்லை.  ஒரே ஒரு நண்பர் பதில் எழுதினார்.  … Read more

பிறந்தநாள் பரிசு

இன்று அராத்துவின் பிறந்த நாள். அதை முன்னிட்டு அவர் நமக்குத் தந்திருப்பது Minxie-யும் அதன் தமிழ் வடிவமான குட்டிமா-வும். பிறந்த நாள் பரிசாக நாம் அவருக்குத் தருவது இந்த நாவல்களை வாங்குவதே. இணைப்பு கீழே: India https://amzn.in/d/91mKkW9 USA https://a.co/d/2On7FJL UK https://amzn.eu/d/8GrhXj5

கொஞ்சம் பொறுங்கள், வருகிறேன்

தன்னுடைய Minxie நாவலின் ஆங்கிலம் தமிழ் மாதிரி, அல்வா மாதிரி மனதில் போகும் என்று நூற்றுக்கு முந்நூறு முறை சொல்கிறார் அல்லவா அராத்து? அதைப் பார்த்ததும் எனக்கு நானும் ஸ்ரீயும் சேர்ந்து எழுதும் Anatomy of Dissonance நாவலின் மொழி ஞாபகம் வந்தது. அந்த நாவல் எலீட் வாசகர்களுக்காக மட்டுமே எழுதப்படுகிறது. மிகக் கடினமான ஆங்கிலமாக இருக்கும். வேண்டுமென்றே கடினமான ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று எழுதவில்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ் அப்படி நினைத்து எழுதவில்லை அல்லவா? பெட்டியோவின் … Read more

மோடுமுட்டிகளே, கொஞ்சம் விலகியிருங்கள்…

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எனக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் வந்தது. என் பெயர் இன்னது. ஊர் இன்னது. (சென்னைக்கு அருகில் உள்ள ஒரு ஊர்) நீங்கள் கோவா செல்லும் தேதி என்ன? சாலையில் செல்லும் ஒருவரை அழைத்து அவர் கன்னத்தில் அறைந்தால் அந்த ஆள் என்ன ஆவான்? அதேபோல் இருந்தது எனக்கு. எனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் நான் அந்த ஆபத்தை சீனி பக்கம் தள்ளி விட்டு விடுவேன். ஊசித் துளையில் ஒட்டகத்தை அல்ல, காண்டாமிருகத்தையே நுழைத்துப் … Read more

சாம்பார் காவியம்

இருபத்தைந்து வயது வரைஅம்மாவின் சமையல்அம்மியும் விறகு அடுப்பும்பிறகு?பிறர் சமைத்துச் சாப்பிட்டதுவிடுதிகளிலும் தோழிகளின் இல்லங்களிலும் என் வீட்டுச் சமையலில் என் பங்கு எண்பது சதவிகிதம்மனையாள் சிரிக்கிறாள்’எண்பது என்னுடையது!’மீதி இருபதுதான் என் மனையாள்நேரக் கணக்கு வைப்போம்ஒன்றரை மணி நேரம் நான்இருபது நிமிடம் அவள்கணிதத்தில் நான் ‘வீக்’அதனால் சதவிகிதங்கள் சற்றேதடுமாறலாம் வாரத்தில் இரண்டு நாள்சாம்பார் ஒரு பெருஞ்சட்டியில்மதியம் சாம்பார்இரவு சாம்பார்மறுநாள் இட்லிக்கு சாம்பார்மறுபடி மதியம் சாம்பார்மறுபடி இரவு சாம்பார்மறு மறுநாள் இட்லிக்கு சாம்பார்மறு மறுநாள் மதியம் முழித்துக்கொள்வேன்ஸ்விக்கியில் ஆட்டுக்கறிஅவள் சைவம்சாம்பாரே தொடரும் … Read more