தியாகராஜா – ஒரு புதிய விவரம்
தியாகராஜா நாவல் வடிவமைப்பு நிலையில் உள்ளது. அது என் கைக்கு வந்ததும் ஒருமுறை பிழைதிருத்தம் பார்த்து விட்டு அச்சகத்துக்குக் கொடுக்க வேண்டியதுதான். அநேகமாக செவ்வாய்க்கிழமை அச்சுக்குப் போய் விடும். 900 பக்கங்கள். அத்தனை பக்கமும் ஒரே நூலாக இருந்தால் எடுத்துப் படிப்பது கடினம். தடித்த அட்டை. தாள்களும் கெட்டி. அதனால் இரண்டு தொகுதிகளாகப் போடலாம் என்பது அச்சகத்தாரின் ஆலோசனை. அதன்படி இரண்டு தொகுதிகளாக ஒரு அட்டைப் பெட்டிக்குள் போட்டுக் கொடுக்கப்படும். இதற்குக் கொஞ்சம் அதிக செலவு எடுக்கும். … Read more