வரும் புதனிலிருந்து மீண்டும் ஆவணப் படத்துக்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. ஆடை அலங்காரத்தில் நான் முன்னோடி என்பது என்னை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும். லினன் சட்டையும் லினன் கால் சராயும் மோஸ்தருக்கு வரும் முன்பே அதை அணிந்தவன் நான். இருபது ஆண்டுகளுக்கு முன்பு. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக லேசான மஞ்சள் கலந்த வெள்ளை நிற (வெளிர் சந்தன நிறம் என்று சொல்லலாம்) டெர்லின் துணியில் கால்சராய் அணியும் பழக்கம் இருந்தது. மேட்டுக்குடி மைனர்களிடையே. நடிகர் ரவிச்சந்திரன் அதைப் பிரபலப்படுத்தினார். இப்போது அந்தத் துணி மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. பாலிவுட் நடிகைகள் அணிகிறார்கள். ட்ரான்ஸ்பரண்டாக இருக்கும். சென்ற வாரம் வினித் அணிந்திருந்ததைப் பார்த்தேன். வரும் செவ்வாய்க்கிழமை அந்தக் கால்சராயை எடுக்கலாம் என்று இருக்கிறேன். ஃபீனிக்ஸ் மாலில் தேடலாம் என்று இருக்கிறேன். யார் வருகிறீர்கள்? ஆலோசனைகள் வேண்டாம். ஃபீனிக்ஸ் மால். செவ்வாய் மாலை.