கடந்த இரண்டு தசாப்தங்களாக சினிமா பாடல் ரசிகர்களிடையே ஒரு புகார் உண்டு. பழைய பாடல்களைப் போல் இப்போதைய பாடல்களில் பாடல் வரிகளையே கேட்க முடிவதில்லை. ஒரே இரைச்சல். வாத்தியக் கருவிகளின் ஓசையில் பாடல் வரிகளே புரிவதில்லை. எல்லாம் ஒரே ஊளை சத்தம். பாடலாசிரியர்களும் சப்தத்துக்கு ஏற்ப வார்த்தைகளை இட்டு நிரப்பிக் கொடுக்கிறார்கள். நினைக்கத் தெரிந்த மனமே மாதிரி ஒரு பாடல் இப்போது வருகிறதா?
இந்தக் குற்றச்சாட்டு எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறாற்போல் ஒரு பாடலைக் கேட்டேன். திரும்பத் திரும்ப ஒரு அம்பது முறையாவது கேட்டிருப்பேன். எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை. சீலே செல்லும் போது என் சீலே நண்பர்களிடம் ஒரு பப்பில் இதைப் போடச் சொல்லி ஆட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இந்தப் பாடல் எனக்கு அறிமுகமான விதம் வேடிக்கையானது. நான் ஒரு தீவிர reels addict. அதில் ஒரு ஸாஃப்ட்வேர் பெண் பிரமாதமாக இந்தப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து விட்டுத்தான் பாடலைத் தேடினேன். சமீபத்திய பாடல் எனத் தெரிந்தது. எனக்கு விடியோ கிடைக்கவில்லை. அதனால் ஆடியோ மட்டும். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு ஐம்பது பாடல்களில் இதையும் ஒன்றாகச் சேர்ப்பேன். அனிருத் உண்மையிலேயே கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பாடலின் விசேஷம், அந்தக் காலத்து ஜாஸ், ப்ளூஸ், ராக் அண்ட் ரோல் எல்லாவற்றையும் இப்போதைய மோஸ்தரில் கலந்து ராட்டினம் விட்டிருக்கிறார் அனிருத். திடீரென்று எனக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய அர்ஹெந்த்தினாவுக்குச் சென்று விட்டது போல் இருந்தது. இந்தப் பாடலை வைன் இல்லாமல் கேட்க முடியாது போல் இருக்கிறது. எக்ஸடஸியின் உச்சம்…
Paraka Paraka Thudikuthe Mp3 Song Download – Pagalworld (pagalwoild.com)