ஒரே ஒரு பாடல் மக்களை எந்த அளவுக்குப் பித்துப் பிடிக்க வைக்கும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். இந்தப் பாடலின் ஆடல் அசைவுக்குச் சொந்தக்காரரான ஜானி மாஸ்டரைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அவர் கொரியாக்ராஃப் செய்த அரபிக் கூத்து போன்ற பாடல்களிலேயே ஜானி மாஸ்டரின் திறமை தெரிந்தது. இந்தப் பாடலுக்கு ஆடும் போது ஆடுபவர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியில் உச்சத்தில் சிரிக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். குறிப்பாக மூன்று தம்பிகள் ஆடுவது பிரமாதம். ஆடலின் அசைவுகளை விட இந்த ஆட்டக்காரர்களின் சிரிப்பை நான் மிகவும் ரசித்தேன்.