சாரு நிவேதிதா ஏன் இப்படி எழுதுகிறார்? – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

அனீஷ் கிருஷ்ணன் நாயரின் இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு நான் பலவிதமான எண்ண அலைகளினிடையே சிக்கினேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருவல்லிக்கேணி லாட்ஜில் வைத்து என் மீது ஒரு அபாண்டம் சுமத்தப்பட்ட போது அதை எதிர்த்து என்ன செய்வது என்று தெரியாமல் என் உடலில் உள்ள எல்லா ஆடைகளையும் களைந்து விட்டு முழு நிர்வாணமாக எல்லோர் எதிரிலும் பத்து நிமிடம் நடந்தேன். ஆடைகளைத் திரும்ப அணிந்ததால் இதோ உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். திரும்ப அணிந்திராவிட்டால் மனநோய் விடுதியில் இருந்திருப்பேன். அந்தத் தருணத்தின் கொந்தளிப்பை இந்தக் கட்டுரையில் பிடித்திருக்கிறார் அனீஷ் கிருஷ்ணன். அவருக்கு என் நன்றி.

தமிழ்நாட்டில் கல்விப் புலத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி இருந்திருக்க வேண்டும்? எப்படி இருக்கிறார்கள்? இலக்கியம் பற்றிப் பேச இப்படி ஒரு பேராசிரியராவது தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். சில புத்திஜீவிகள் இருக்கிறார்கள், தெரியும். ஆனால் அவர்களும் சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றி வாய் திறப்பதில்லை.

சாரு நிவேதிதா ஏன் இப்படி  எழுதுகிறார் ?- அனீஷ் கிருஷ்ணன் நாயர் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)