வவுனியாவில் இரண்டு தினங்கள் தங்கிவிட்டு இப்போது யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். யாழ்ப்பாணம் போன பிறகுதான் எந்த விடுதியில் தங்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். அங்கே ஒடியல் கூழ் சாப்பிட வேண்டும் என்பது ஆசை. ஆனால் யாரைக் கேட்பது என்று தெரியவில்லை. 50 ஆண்டுகளாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் நான். யாழ்ப்பாணமும் தமிழ் பேசும் நிலம்தான். அங்கே எனக்கு ஒடியல் கூழ் கொடுக்க ஒரு ஆள் இல்லை. ரெஸ்டாரண்டில் கிடைக்குமா என்று கேட்டுப் பார்ப்பதுதான் ஒரே வழி போல. 50 ஆண்டுகள் தமிழில் எழுதியதை விட பொன்னியின் செல்வனில் ஒரு போர் வீரனாக நடித்திருக்கலாம். ஒடியல் கூழ் கிடைத்திருக்கும்…