ஷ்ருதி டிவி பத்து லட்சம் வாசகர்களை அடைந்திருக்கிறது. கபிலனுக்கும் சுரேஷ்குமாருக்கும் வாழ்த்துகள்.
ஷ்ருதி டிவி தமிழ் இலக்கிய உலகில் ஒரு மகத்தான சாதனை. ஷ்ருதி டிவி இல்லாவிட்டால் என்னுடைய மேடைப்பேச்சுகள் எதுவுமே வாசகர்களைச் சென்றடைந்திருக்காது. சமகாலத் தமிழ் இலக்கியவாதிகள் அத்தனை பேரையும் வாசகர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை ஷ்ருதி டிவி கபிலனுக்குரியது. அவர் ஒரு கோடி வாசகர்களை விரைவிலேயே அடைய வாழ்த்துகிறேன்.