படித்ததில் பிடித்தது

சவூதி அரேபியா பற்றி சமீபத்தில் ஒரு சிறிய குறிப்பைப் படித்தேன். அதை எழுதியவரின் கருத்து அது ஒரு தேசமே இல்லை, வெறும் பாலைவனம் என்பது. அந்த நண்பர் அப்துர் ரஹ்மான் முனீஃப் என்ற சவூதி அரேபிய எழுத்தாளரைப் படித்திருக்க வாய்ப்பு இல்லை. தாமஸ் ஹார்டி, தஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களுக்கு நிகரான எழுத்தாளர் அப்துர்ரஹ்மான் முனீஃப். சவூதியில் வசிக்கும் நண்பர்கள் முனீஃபை வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சவூதி பற்றி சமீபத்தில் ஒரு கதை படித்தேன். மலையாளத்திலிருந்து அதை மொழிபெயர்த்தவர் என் நண்பர் ஏ.கே. றியாஸ் முஹம்மத். மலையாள மூலம் முஸஃபர் அஹமத். இவர் முன்பு மாத்யமம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். றியாஸ் ஒரு அற்புதமான மொழிபெயர்ப்பாளர். மொழிபெயர்ப்பு என்றே தெரியாதபடி தமிழிலேயே எழுதியது போல் இருக்கும். படித்துப் பாருங்கள். கதையின் பெயர்: ஓநாய் அடக்கம்.

இணைப்பு:

https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/296/articles/16-%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D