ஹம்ரா தெரு

பெய்ரூட்டின் பிரதான ஹம்ரா தெரு
நானும் அமல்ராஜும் நடந்து கொண்டிருக்கிறோம்
ஒரு உணவு விடுதியின் வாசலில் அமர்ந்து
ஒரு ஜோடி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது
அவர்களுக்கு எதிரே ஒரு பெண்
தன் வலதுகரத்தை நீட்டிக்கொண்டிருக்கிறாள்
பதின்மூன்று வயது இருக்கலாம்
ஹிந்திப்பட ஹீரோயின் தோற்றம்
ஜோடி அவளை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது
அதிர்ச்சியுடன் அமல்ராஜைப் பார்க்கிறேன்
சிரியா என்கிறார்.