கவிதையையும் விட்டு வைக்கவில்லையா
எனக் கேட்கிறான் சக கவி
மெல்லிய புன்னகையுடன்.
உண்மைதான்
கவிதை தீண்டாத வாழ்நாளில்
இப்போது
அகவை எழுபத்து மூன்றில்
தினம் மூன்று கவிதை
பொங்கி வழிகிறது
புதுப்புனல் போல்
அடக்க முடியாமல்.
ஏதோவொரு குமுறலை
கரையில் தணிக்க முயல்கிறது.
ஆனால்
எழுத எழுத
குமுறல் ஒரு பாறையாக
மார்பில் கனக்கிறது
மேலும் கனக்கிறது.