பதினைந்து வயதில் ஒரு பெண்
இருபத்தைந்து வயதில் இன்னொரு பெண்
முப்பத்தைந்து வயதில் ஒரு பெண்
நாற்பத்தைந்து வயதிலிருந்து இன்று வரை
என் மனையாள்
மாதமொரு முறை
இடையிலொரு பெண்
இப்போது எழுபத்து மூன்று வயதில்
ஒரு பெண்
எல்லோரும் சொன்னது
“நீ என்னை ஒருபோதும் புரிந்து கொள்ளப்
போவதில்லை.”
துக்கித்து அமர்ந்திருந்த என்னெதிரே
வந்த மைனாவிடம் சொன்னேன்
அது சொன்ன யோசனை:
புரிந்து கொள்ள வேண்டாம்
மௌனித்திருந்தால் போதும்