சாராயக் கவிதை

ங்கொய்யால
கடைசீல
ஏஐய்யை கேட்டு
அது சொன்னபடி
செஞ்சு
நாமளும் ப்ளூ டிக்கை
மறச்சிட்டம்ல
என்ன நக்கல் புண்டயா
வாடீ வா
இப்ப வச்சுக்குவோம்
வெளயாட்ட

என்னா
குடிச்சிட்டு ஒளர்றனா
ஆமான்டி குடிச்சேன்
அதுக்கு என்னா
ஆனா ஒளற்ல
குடிச்சா நா(ங்) ஒளற மாட்டெ(ங்)
எ(ங்) ஃப்ரன்ஸ்ங்க கிட்ட
கேட்டுப் பாரு

என்னது சாராய நாத்தமா
ஆமா
கேரளத்து சாராயம்
ஒரு ஃப்ரெண்ட் குடுத்தான்
என்னாங்ற இப்போ
வா நீயு(ங்) குடி

நடு ராத்திரி
குப்பெ மேட்டு மேல
சாராய குப்பிய ஒடச்சு
நெலா வெளிச்சத்ல
நாம சிரிச்சா
இந்த உலகத்தையே
எரிச்சிர்லாம்லடீ?

இன்னோண்ணு
நீ குடிச்சுப் பாத்துருக்கெ(ங்)
போதையாயிப் பாத்ததில்ல
சாராயொ(ங்) போதெ வரு(ங்)
செம போதெ
நீ போதையாயிப் பாக்கணுன்டி
ஏன்னா
நீ எனக்கு அனுப்பி வச்ச
அத்தன கவிதையும்
நீ
போதெல எழுதுனதுதான்னு
நீதானெ சொன்னெ?
வா
குடிப்போ(ங்)
குடிச்சிக்கிட்டே கவிதையெழுதி
கொண்டாடுவோ(ங்)

ஆனா
ஒரு நொடி
காகிதத்துல சாராயம் வழிஞ்சு
கவிதெ கரெஞ்சு போய்ட்டா?
இந்த நெலாவப் பாத்து
நாம ரெண்டு பேரும்
இந்த ஒலகத்துக்கு
என்னா சொல்றது?