சாகித்ய அகாதமி பரிசு யாருக்கு?

இரண்டொரு தினங்களுக்கு முன்பு பத்திரிகை நண்பரிடமிருந்து ஃபோன்.  சாகித்ய அகாதமி பரிசுக்காக யார் யாரைப் பரிந்துரை செய்வீர்கள்?  நான் கேட்டேன், அந்தப் பரிசு அகில இந்திய அளவில் கொடுக்கப்படுகிறதா, அல்லது, ஒவ்வொரு மொழிக்குமா?

சத்தியமாக நம்புங்கள், எனக்கு அந்த விஷயம் தெரியாது.  அகிலனுக்கு ஒரு விருது  கொடுக்கப்பட்ட போது சுந்தர ராமசாமி கடுமையாகத் தாக்கி எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன்.  அது சாகித்ய அகாதமியா, பா. ஞானபீடமா என்று குழப்பம்.  பிறகு பத்திரிகை நண்பரே எனக்கு எல்லாவற்றையும் விளக்கிய பிறகு நான் மூன்று பேரைச் சொன்னேன்.  மூன்றாவதில் கணேச குமாரன்.  ஏன் எஸ்.ராமகிருஷ்ணனைச் சொல்லவில்லை என்று ஏகப்பட்ட மின்னஞ்சல்கள்.  நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது எஸ்.ரா.வுக்குத்தான்.  ஒருவேளை  தவறினால் அடுத்த ஆண்டு கிடைத்து விடும்.  அதனால்தான் அவர் பெயரைக் குறிப்பிடாமல் கணேச குமாரன் பெயரைக் குறிப்பிட்டேன்.  மேலும், இளவட்டங்கள் பலரும் பிரமாதமாக எழுதி வருகிறார்கள். கணேச குமாரன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போல் நினைக்கிறேன்.

மற்ற சிலரின் பரிந்துரைகள் அவர்கள் அந்தந்த எழுத்தாளர்களுக்கு எழுதிக் கொண்ட நட்புக் கடிதங்களைப் போல் இருந்தன என்பதாக ஒரு எழுத்தாளர் சொன்னார்.  அதை நான் வழி மொழிகிறேன்.  அவர் சொன்ன வார்த்தை, லவ் லெட்டர்ஸ்.

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article6703693.ece