எத்தனையோ இசைக் கலைஞர்கள், இசை மேதைகள், இசை ஞானிகள் உண்டு. ஆனால் எனக்கு இந்தப் பாடகரைக் கேட்பது போல் உன்னதத் தருணம் வேறேதும் இல்லை. பல்லவியே ஆறு நிமிடம். அதற்குப் பிறகு பாடல் மூன்று நிமிடம் தான். இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எங்கே கேட்டாலும் என் கண்கள் குளமாகி விடும். வெறும் ஹார்மோனியம், ஷெனாய், ரெண்டு டேப் இதை வைத்துக் கொண்டு இசை வானின் உச்சத்தில் சஞ்சரிக்கும் இந்த இசை ஞானிக்கு உலகமெல்லாம் ரசிகர்கள் இருந்தும் ஒரு சாராரைத் தவிர வேறு யாருடைய செவிகளையும் எட்டாதவர். இப்படி ஒரு குரலை என் வாழ்நாளில் கேட்டதில்லை. எந்த ஒரு பாடகராக இருந்தாலும் அவரைப் போல் குரல் வளம் கொண்ட இன்னொரு பாடகர் இருப்பார். ஆனால் இவரது குரலின் அருகில் போகக் கூட யாரும் இல்லை. யாராலும் முடியாது. அப்படிப்பட்ட unique கலைஞர். இ.எம். ஹனிஃபா என்ற அந்த மாபெரும் இசைக் கலைஞனின் மிக முக்கியமான பாடல்; என் தேகத்தின் குருதியாய் ஓடும் பாடல் இது…
https://www.youtube.com/watch?v=25OOw2qBykg&list=PL6604B2653E49560C&index=12
புதிய எக்ஸைல் நாவலில் இந்தப் பாடல் தரும் உன்னதத் தருணத்தை எட்டவே முயற்சி செய்திருக்கிறேன். அதில் தோல்வி அடைந்திருந்தேன் எனில் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலைத் திரும்ப எழுதுவேன்.